குளத்தில் வளர்க்கப்படும் மீன்களை சூறையாடும் நீர் நாய்கள்

பாசிர் ரிஸ் பூங்காவில் தனியார் துறைக்குச் சொந்தமான குளத்தில் வளர்க்கப்படும் மீன்களை கடந்த ஆறு மாதங்களாக ஒன்பது நீர் நாய்கள் சூறையாடி வருகின்றன. இதனால் ‘டிபெஸ்ட் ரெக்ரி யேஷன்’ என்ற குளத்துக்குச் சொந்தக்காரரான திரு டேரன் செங்கின் வருமானத்தில் பெரிய துவாரம் விழுந்துள்ளது. ஒவ் வொரு முறையும் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் $300 முதல் $500 மதிப்பிலான மீன்களை நீர் நாய்கள் தின்றுவிடுவதாக நியூ பேப்பருக்கு அளித்தப் பேட்டியில் திரு டேரன் செங் கூறியிருந்தார். 2014ல் குளத்தை வாங்கிய போது இரண்டு நீர் நாய்களை மட்டுமே பார்த்ததாகக் கூறிய அவர், ஆறு மாதங்களில் நிலைமை மோசமாகி விட்டது என்றார். “இப்போது ஒன்பது நீர் நாய்கள் உள்ளன. இன்னும் இரண்டு சேர்ந்தால் ஒரு காற் பந்துக்குழுவையே அமைத்து விடலாம்,” என்றார் அவர். நீர் நாய்களின் மீன் வேட்டைகளால் திரு டேரனுக்கு மாதந்தோறும் பல ஆயிரம் வெள்ளி நட்டம் ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜூரோங்கில் உள்ள ஜாலான் டெருசனில் வீசப்பட்ட பொருட்கள். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

13 Nov 2019

பொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்