சமூகத்திற்கு $150,000 திரட்டிய பாலர்கள்

சிங்கப்பூரின் 300க்கு மேற்பட்ட பாலர் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 20,000 பாலர்கள் சமூகத் திட்டங்களில் 500,000 மணி நேரத்தைச் செலவழித்து கடந்த ஆறு மாதங்களில் 150,000 வெள்ளிக்கு மேல் திரட்டி சமூகத் திற்குப் பங்காற்றியிருக்கின்றனர். அரசாங்க முயற்சிகளின் ஓர் அங்கமாக இந்த நிதியை பாலர்கள் திரட்டியுள்ளனர். கடந்த ஆண்டு ஆரம்பக்கால பாலர் பருவ மேம்பாட்டு வாரியத் தின் முதல் சமூகத் திட்டம் தொடங்கப்பட்டது. ‘சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் கனவு காணுங் கள்’ என்ற திட்டத்தில் அப்போது 8,000 குழந்தைகள் பங்கேற்றனர். அதன் பிறகு சமூகத் திட்டங் களில் பாலர்கள் செலவழிக்கும் நேரம் ஐந்து மடங்காக அதி கரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு திரட்டப்பட்ட 100,000 வெள்ளி யுடன் ஒப்பிடுகையில் தற்போது பாலர்கள் அதிக நிதியைத் திரட்டியிருக்கின்றனர். பாலர்களின் நிதி பல்வேறு சமூக உதவி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் புற்று நோய் அறநிறுவனம், சிங்கப்பூர் பார்வையற்றோர் சங்கம், செயின்ட் ஜான்ஸ் முதியோர் களுக்கான இல்லம் ஆகிய வற்றை உள்ளடக்கிய சமூக உண்டியலும் அதிபர் சவால் அறப்பணியும் பாலர்களின் நிதி மூலம் பலன் அடைந்துள்ளன.

‘சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் கனவு காணுங்கள்’ என்ற சமூகத் திட்டத்தில் பங்கேற்ற பாலர்களுடன் உரையாடும் அதிபர் டோனி டான் கெங் யாம். உடன் அமைச்சர் டான் சுவான் ஜின்(வலம்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next