குப்பைத் தொட்டியில் விழுந்து ஊழியர் காயம்

வீடமைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மாடி வீட்டின் குப்பைத் தொட்­டி­யில் இருந்து விழுந்த ஊழியர் ஒருவர் காய­மடைந்து உள்ளார். நேற்றுக் காலை 10.10 மணி அளவில் சம்ப­வம் குறித்து தகவல் வந்த­தாக சிங்கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. ஜாலான் ரூமா திங்கி, புளோக் 8ல் சம்ப­வம் நிகழ்ந்­ துள்­ளது. மேலே இருந்து விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் பட்டது. ஒருவர் கொள்­ளக்­கூ­டிய குப்பைத் தொட்­டிக்­குள் 20 வய­து­களை உடைய ஆடவர் ஒருவர் காய­மடைந்து இருந் தார் என்று குடிமைத் தற்­காப்புப் படை கூறியது. அதி­கா­ரி­கள் அந்தக் கூண்டை வெட்டி காய­மடைந்த­வரை மீட்­ட­னர். வேலையிட, தீ பாதுகாப்பு ஆலோசனை நிறுவனம் ஒன்றின் ஃபேஸ்புக் தகவலின் படி, விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அவர் சாயம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்ததாக அறியப்படுகிறது. அவர் தேசிய பல்­கலைக்­ க­ழக மருத்­து­வ­மனைக்கு கொண்டு செல்­லப்­பட்­டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது