நடு­வ­யது வாழ்க்கைத் தொழில் மானியத்தால் பலர் பயன்

தொழி­லா­ளர் சந்தை மெது­வடைந்­துள்ள இக்­கா­ல­கட்­டத்­தில் நடு­ வ­யது வாழ்க்கைத் தொழில் மேம்படுத்­தப்­பட்ட மானியத் திட்டம் அதிக பொருத்­த­மா­ன­தாக இருக்­கிறது என்று ஸ்கில்ஸ்ஃப்­யூச்­சர் சிங்கப்­பூ­ரின் தலைமை நிர்வாகி திரு இங் செர் போங் கூறி­யுள்­ளார். கடந்த அக்­டோ­ப­ரில் இந்த மானியம் அறி­மு­கப்­படுத்­தப்­பட்­டது முதல் இது­வரை­யில் 52,000க்கும் அதி­க­மான சிங்கப்­பூ­ரர்­கள் பய­ன் அடைந்­துள்­ள­னர் என அவர் தெரி­வித்­தார். பொங்கோல், வாட்­டர்வே பாயிண்ட் கடைத்­தொ­கு­தி­யில் நடை­பெற்ற சாலைக்­காட்­சி­யில் செய்­தி­ யா­ளர்­களி­டம் பேசிய அவர், “பொரு­ளி­யல் மறு­கட்­டமைப்­பும் வர்த்­த­கங்களின் நிலை­யற்ற நிலைமை­யும் காணப்படும் இந்­நே­ரத்­தில், தற்­போதைய வேலை­களுக்­கு ஏற்ற திறன்களை மட்­டு­மின்றி எதிர்­கா­லத் தொழில்­களுக்­கான திறன்களை­யும் கைக்­கொண்­டி­ருக்க வேண்டியது முக்­கி­யம்,” என்றார்.

40 வயதும் அதற்கு மேற்­பட்ட வய­து­முள்ள சிங்கப்­பூ­ரர்­கள் தங்கள் வேலைத் திறன்களை மேம்படுத்த இத்­திட்­டம் வழி அதிக மானி­யத்தைப் பெறலாம். அர­சாங்க­மும் ஸ்கில்ஸ்ஃப்­யூச்­சர் சிங்கப்­பூ­ரும் அங்­கீ­க­ரிக்­கும் 8,000க்கும் மேற்­பட்ட பயிற்­சித் திட்­டங்களுக்கு 90% வரை மானியம் பெறலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை