மருத்துவச் சோதனை: பாதிப் பேருக்கு தீரா நோய்

சிங்கப்­பூ­ரில் சென்ற ஆண்டு நடத்­தப்­பட்ட பொது உடல்­நலப் பரி­சோ­தனை­களில் பங்­கேற்­ற­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேருக்கு தீரா நோய் வரக்­கூ­டிய அபாயம் இருப்­பது கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டின் சுகாதார பரி­சோ­தனைத் திட்­டத்­தில் பங்­கேற்ற சுகா­தா­ரத்­ துணை அமைச்சர் லாம் பின் மின், "கடந்த ஆண்டில் 46 விழுக்­காட்­டி­ன­ருக்கு குறைந்தது ஒரு தீரா நோய் இருப்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­ பட்­டன," என்று தெரி­வித்­தார். "இது அதி­க­மான நோய் விகிதம். எனினும், உடல் ஆரோக்­கி­யத்தைக் கட்­டுக்­குள் கொண்டு வர முதல் அடிதான் பரிசோதனை," என்றும் அவர் சுட்­டினார். 'தேசிய பல்­கலைக்­க­ழக யோங் லூ லின் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் பொதுச் சுகாதாரச் சேவை' என்ற ஆண்டு உடல்­நலப் பரி­சோ­தனை நிகழ்ச்­சியை 11வது ஆண்டாக தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­துவத் துறை மாண­வர்­கள் நடத் ­தி­னர்.

கிளமெண்டி அவென்யூ 3ல் நேற்றும் இன்றும் காலை 10 மணி முதல் இந்தப் பொது உடல்­நலப் பரி­சோ­தனை நடை­பெ­று­கிறது. 40 வயதும் அதற்கு மேற்­பட்ட சிங்கப்­பூ­ரர்­களும் நிரந்த­ர­வா­சி­களும் இதில் கலந்­து­கொள்­ள­லாம். இந்த ஆண்டு நிகழ்ச்­சி­யில் புதிதாக செவிப் புலன் சோதனை­யும் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. 60 வயதும் அதற்கு மேற்­பட்­ட­வர்­களும் இச்­சோ­தனையைச் செய்­து ­கொள்­ள­லாம். பரி­சோ­தனை­யில் ஒரு­வ­ருக்கு ஏதாவது குறைபாடு தென்­பட்­டால், அவர் கூடுதல் பரி­சோ­தனைக்­காக தேசிய பல்­கலைக் ­க­ழக மருத்­து­வ­மனை­யின் நகரும் செவிப்­ பு­லன் மருந்தக பேருந்துக்கு பரிந்துரைக்கப்படு­வார். இந்தப் பேருந்து கிளமெண்­டி­யில் வேறு இரு­நாட்­களில் செயல்­படும்.

பொது உடல்­நல பரி­சோ­தனை­ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருடன் உரையாடுகிறார் சுகா­தா­ரத் துணை அமைச்சர் லாம் பின் மின் (இடது). படம்: என்யுஎச்எஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!