அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தை நெருக்க நீதிமன்ற உத்தரவுக்கு முயற்சி

பொங்கோல் ஈஸ்ட் தொடர்பான பத்திரங்களைக் கொடுக்கும்படி அல்ஜுனிட்- ஹவ்காங் நகர மன்றத்தையும் அதன் கணக்குத் தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜியையும் நெருக்கும் வகையில் தனது மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்கும்படி பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் நேற்று இதனைத் தெரிவித்தது. பொங்கோல் ஈஸ்ட் தொகு தியை 2015 பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி கைப்பற்றியது. அதனையடுத்து அந்தத் தனித் தொகுதி பாசிர் ரிஸ்-பொங்கோல் நகரமன்றத்தின் வசம் வந்தது.

பொங்கோல் ஈஸ்ட் தொடர்பான ‘பிரிவு 1’ பத்திரங்களை பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் அதன் கணக்குத் தணிக்கை நிறு வனமான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் ஆகியவற்றிடம் நிபந்தனையின்றி ஒப்படைக்கும்படி மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகஸ்ட் 18ஆம் தேதி அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்திற்கு உத்தரவிட்டு இருந்ததாக பாசிர் ரிஸ் மன்றம் நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது. ஆனால் ஆறு மாத காலத்திற்கு மேல் ஆகியும் அந்தப் பத்திரங்கள் ஒப்படைக்கப்படவில்லை என்று பாசிர் ரிஸ் மன்றம் கூறியது. அல்ஜுனிட்-ஹவ்காங் மன்றத் திற்குப் பல தடவை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அந்த மன்றம் ‘பிரிவு 1’ பத்திரங்கள் அனைத்தை யும் இன்னமும் கொடுக்கவில்லை. ‘பிரிவு 2’ பத்திரங்கள் எதையும் அது கொடுக்கவில்லை என்று பாசிர் ரிஸ் மன்றம் தெரிவித்து உள்ளது.

Loading...
Load next