மக்களை எட்டும் அடித்தள தலைவர்கள்

வில்சன் சைலஸ்

புது வீடுகளில் குடியேறுவதற்கு முன்பே அங்குள்ள குடியிருப்பாளர் களை அறிந்துகொள்ள உதவுகின் றனர் டெக் கீ வட்டார அடித்தளத் தலைவர்கள். ஏற்கெனவே அங்கு வசித்து வருபவர்களுடன் நட்பு பாராட்டுவதுடன் புதிதாக குடியேறு பவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்கள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். மக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் நடந்த வருடாந் திர அடித்தளத் தலைவர்களுக்கான ஒரு நாள் ஆய்வரங்கில் அடித்தள தலைவர்களின் முயற்சிகள் முன் வைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று டெக் கீயில் அறிமுகமான இந்த முயற்சி.

தேவைக்கேற்ப கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளில் (பிடிஓ) புதிய குடியிருப்பாளர்கள் குடி யேறுவதற்கு முன்பே அடித்தளத் தலைவர்கள் ‘டெக் கீ பார்க்வியூ’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு தைரியமும் ஊக்கமும் அளித்து வருகின்றனர். “புதிய இடம் எப்படி இருக்கும்?, உதவிக்கு எங்கே போவது? என முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் குடியேறும் இளம் ஜோடிகள், புதிய தம்பதிகளுக்குச் சிறு அச்சம் ஏற் படலாம். டெக் கீயில் பார்க் வியூவில் குடியேறுபவர்கள் அத் தகைய சூழலை எதிர்கொள்வ தில்லை,” என்றார் திரு பிரகாஷ் குலசேகர், 49.

பார்க்வியூ தனியார் பேட்டையின் குடியிருப்பாளர்களுடன்  டெக் கீ அடித்தளத் தலைவர் திரு பிரகாஷ் குலசேகர் (நடுவில்). படம்:  மக்கள்  கழகம் 

Loading...
Load next