எட்டு முதியோர் கடப்பிடங்கள்

சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு வாக்கில் சாலைகளில் 50 முதியோர் கடப்பிடங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன. அவற்றில் எட்டு இடங்கள் பூர்த்திசெய்யப் பட்டிருக்கின்றன. அடுத்த முதியோர் கடப்பிடம் ஹவ்காங்கில் இந்த மாத முடிவில் தயாராகிவிடும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தக் கடப்பிடங்களுக்கு வாகன ஓட்டிகளும் வலுவான ஆதரவு அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூவுக்கு அளித்த பதிலில் அமைச்சர் கூறினார்.