இணையம் வழி சூதாட்டத்தில் ஈடுபடாமல்

இளையரைத் தடுக்க பல ஏற்பாடுகள் அமல் இணையம் மூலம் பந்தயம் கட்டி சூதாடுவதிலிருந்து இளையர் களையும் இத்தகைய பழக்கத்திற்கு உட்பட்டு பாதிப்பு அடையக்கூடிய மற்றவர்களையும் பாதுகாப்பதற் காக உள்துறை அமைச்சு பல நட வடிக்கைகளை அமல்படுத்தும். இத்தகைய பலதரப்பட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க சூதாட்டம் நடத்தும் அமைப்புகளுடன் சேர்ந்து அமைச்சு அணுக்கமாகச் செயல் பட்டு இருக்கிறது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் நாடாளுமன்றத்தில் நேற்று இதனை தெரிவித்தார். இணையம் வழி சூதாட்டத்தில் கணக்கு வைத் திருக்கும் அனைவரும் குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவர் களாக இருக்க வேண்டும் என்பது ஓர் ஏற்பாடு. இணையம் வழி சூதாட்டத்தை நடத்துவோர் விண்ணப்பதாரர் களின் அடையாளத்தை முற்றிலும் சோதிக்க வேண்டும். நேருக்கு நேரும் சோதிக்க வேண்டியிருக்கும்.

இவையெல்லாம் முடிந்த பிறகு தான் ஒருவர் கணக்குத் திறக்க முடியும். சூதாட்டத்தில் அளவுக்கு அதிகமாக பணத்தை இழந்து தவிப்போரைக் காக்கும் நோக்கத் தில் பல ஏற்பாடுகளும் இடம்பெறு கின்றன. குடும்ப ஆட்சேபம், இதர நிதி சூழ்நிலைகள் காரணமாக சூதாட் டக் கூடங்களுக்குச் செல்ல தடை செய்யப்பட்டிருப்போர், கணக்குத் திறக்க முடியாது. தங்களை இணையம் வழி சூதாட்டத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டு தனிப்பட்டவர்கள் யாரும் மனுச் செய்யலாம். சூதாட்டத்தில் அளவுக்கு அதிகமாக பணம் செலவு செய் வதையும் சூதாட்டத்திற்கு அடிமை யாவதையும் தடுக்கும் வகையில் கணக்கு வைத்திருக்கும் அனை வரும் அன்றாட செலவு வரம்பு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும். அதற்கு பிறகுதான் அவர்கள் பந்தயம் கட்ட முடியும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!