ஆண்டிறுதிக்குள் முழுமை பெறும் முனையம் 4ன் கட்டுமானப் பணி

புதிதாகக் கட்டப்பட்டு வரும் சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையம் இவ் வாண்டு இறுதிக்குள் முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முனையம் நான்கிற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதற்கான புதிய சாலைகள், பாலங்கள், 68 மீட்டர் உயரமுள்ள கட்டுப்பாட்டுக் கோபுரம் ஆகியவை தயாராகி விட்டன. முனையத்துக்கு முன்னால் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், பயணிகளுக்காக டாக்சிகள் காத்திருப்பதற்கான வெளிப்புறத் தளம், பேருந்து முனையம் ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைய இருக்கின்றன. இருப்பினும், பயணிகளை ஏற்று விமான நிலையச் சேவைகளை வழங்க முனையம் நான்கு இன்னும் தயாராக இல்லை என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தின் செய்தித்தொடர்பாளர் ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் சாதனங் கள், செயல்முறை ஆகியவற்றைச் சோதித்துப் பார்ப்பதே அடுத்த கட்ட நடவடிக்கையாகும். முதல் மூன்று முனையங்களைப் போல் அல்லாது, முனையம் நான் கில் தானியக்க முறை அதிக அளவில் கையாளப்படும். பயணி கள் பதிவு, பயணப் பெட்டி களுக்கான பட்டைகளை ஒட்டு தல், குடிநுழைவுச் சோதனை ஆகியவற்றில் தானியக்கத் தெரிவுகள் வழங்கப்படும். விமானத்துக்குள் செல்வதற்கு முன்பு பயணிகளைச் சோதனை செய்வதற்குப் பதிலாகப் புதிய முனையத்தில் அவர்கள் மையப் படுத்தப்பட்ட சோதனை முறைக்கு உட்படுத்தப்படுவர். தொடக்கங்களில் எழும் பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த ஆண்டின் பிற்பகுதியில் தீவிரச் சோதனைகள் மேற்கொள்ளப்படும். முனையம் அதிகாரபூர்வமாகத் திறப்பதற்கு முன்பு 50க்கும் அதிகமான சோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ