சிங்கப்பூரர் அல்லாத மாணவர்களின் பள்ளிக் கட்டணம் உயர்கிறது

அரசாங்கப் பள்ளிகளிலும் அரசாங்க ஆதரவுப் பள்ளிகளிலும் பயிலும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோருக்கான பள்ளிக் கட்டணத்தை உயர்த்த இருப்பதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பள்ளிக் கட்டணம் குறித்து அமைச்சு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தும் மறுபரிசீலனையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும். சிங்கப்பூரர்கள் செலுத்தும் பள்ளிக் கட்டணத் தொகைக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோர் செலுத்தும் பள்ளிக் கட்டணத் தொகைக்கும் உள்ள வித்தியாசத்தை அதிகப்படுத்த இந்த மாற்றம் கொண்டு வரப்படுவதாக அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. சிங்கப்பூர் மாணவர்களுக்கான பள்ளிக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கான பள்ளிக் கட்டணம் மாதத்துக்கு 20 வெள்ளியிலிருந்து 60 வெள்ளி வரை உயரும். வெளிநாட்டு மாணவர்களுக்கான பள்ளிக் கட்டணம் 20 வெள்ளியிலிருந்து 150 வெள்ளி வரை உயரும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறுவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு. படம்: நீதிமன்ற ஆவணங்கள்

15 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’