நோட் 7ஐத் திருப்பிக் கொடுத்து பணம் / கைபேசி பெறலாம்

சிங்கப்பூரில் சாம்சங் கேலக்சி நோட் 7 வைத்திருப்போர் அதனைத் திருப்பிக் கொடுத்து அதற்கான முழுத் தொகையையும் திரும்பப்பெறலாம். உலகின் ஆகப் பெரிய கைபேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சங், புதிய கைபேசியான சாம்சங் கேலக்சி நோட் 7ஐ வெளியிட்டு இரு மாதங்களுக்குள்ளாக அதனை மீட்டுக்கொள்ளும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணத்தைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக நோட் 7 கைபேசியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வேறொரு கைபேசியையும் விலை வேறுபாட்டால் மிச்சத் தொகையிருந்தால் அதையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த முறையில் நோட் 7க்குப் பதிலாக வேறு நிறுவனத் தயாரிப்புகளை வாங்க முடியுமா என்பதும் எவ்வளவு தொகை திருப்பித் தரப்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள், சில்லறை விற்பனைப் பங்காளிகள் ஆகியோருடன் அணுக்கமான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்கள் கேலக்சி நோட் 7ஐத் திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் அல்லது வேறொரு கைபேசியைப் பெறும் முறை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் சாம்சங் நேற்று தெரிவித்தது. ‘சாம்சங் கான்சியெர்ஜ்’ சேவையை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கான தீர்வும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகச் சொன்ன சாம்சங், உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் 1800-7267864 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்றது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் 2019 ஜூலை 19ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழா. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

தேவையான அளவுக்கு உள்ளூர் தொழில்நுட்பப் பட்டதாரிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகிறது

தாயைக் கொலை செய்ததாக ஏற்கெனவே குற்றம் சுமத்தப்பட்டு உள்ள கேப்ரியல் லியன் கோ மீது அவருடைய பாட்டியின் மரணம் தொடர்பில்,  கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

22 வயது ஆடவர் மீது 2வது கொலைக் குற்றச்சாட்டு

சமரசம், பேச்சுவார்த்தை போன்ற மாற்று வழிகள் மூலம் பிரச்சினை களுக்குத் தீர்வுகாண ஆற்றிவரும் தொண்டுகளுக்காக தலைமை நீதிபதி திரு மேனன் அனைத்துலக அளவில் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

தலைமை நீதிபதிக்கு உலக அங்கீகாரம்