கண்மூடித்தனமாக நீல நிற லம்போகினியை ஓட்டியவர் கைது

நீல நிற லம்­போ­கினி கார் ஒன்றை விரைவுச் சாலையில் கண்­மூ­டித்தனமாக ஓட்டிச் சென்ற ஆடவர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இம்­மா­தம் ஒன்றாம் தேதி ஆபத்­தான முறையில் கார் ஓட்டிச் சென்ற­தற்­காக 45 வயது ஆட­வரைக் கைது செய்ததாக போலிஸ் பேச்­சா­ளர் நேற்று தெரி­வித்­தார். கைது­செய்­யப்­பட்­டவர் அந்த காரின் உரிமை­யா­ளரா என்பது தெரி­ய­வில்லை. ஈஸ்ட் கோஸ்ட் பார்க்­வே­யில் நிகழ்ந்த இச்­செ­யலை ஹெங் சீ மெங்கின் காரில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கேமரா படம்­பி­டித்­தது.

இம்­மா­தம் இரண்டாம் தேதி ஹெங் சீ மெங் தமது ஃபேஸ்­புக் பக்­கத்­தில் பதி­வேற்­றிய அந்தக் காணொளியை இதுவரை 120,000 பேர் பார்வை­யிட்டுள் ளனர். மேலும், 1,700 முறை அது பகி­ரப்­பட்­டுள்­ளது. இரண்டு கார்­களுக்கு இடை­யி­லான குறைந்த இடை­வெ­ளி­யில் நீல நிற லம்­போ­கினி கார் சீறிப்­பாய்ந்து முந்திச் செல்வதை அந்தக் காணொளி காட்­டு­கிறது. குடும்பத்­து­டன் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த ஹெங் தமக்கு இந்தச் செயல் மிகுந்த அச்­சத்தை விளை­வித்த­தாகக் கூறி­யுள்­ளார். சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது