வேன் சாய்ந்து ஒருவர் காயம்

நார்த் போன விஸ்தா ரோடு, ஆயர் ராஜா அவென்யூ சாலை சந்திப்பில் நேற்று நிகழ்ந்த விபத்தில் ஒரு வேன் பக்க வாட்டில் சாய்ந்தது. இதில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து காலை 10.37 மணியளவில் தகவல் கிடைத்ததும் இரண்டு தீ அணைப்பு மோட்டார் சைக்கிள் களும் இரண்டு தீ அணைப்பு வாகனங்களும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் அனுப்பி வைக்கப் பட்டன என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரி வித்தது. சம்பவ இடத்தில் பக்கவாட்டில் சாய்ந்திருந்த வேனில் சிக்கி யிருந்த ஆடவர் வெளியேற குடிமைத் தற்காப்புப் படையினர் உதவிக்கரம் நீட்டினர். ஆடவருக்கு சிறு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதை அவர் ஏற்க மறுத்ததாகவும் குடிமைத் தற் காப்புப் படை தெரிவித்தது. இதற்கிடையே விபத்து பற்றி டுவிட்டரில் வெளியான புகைப்படத்தில் நீல நிற கம்ஃபர்ட் டெல்குரோ கார் மீது மஞ்சள் நிற வேன் ஒன்று மோதியிருந்த தைக் காண முடிந்தது.