ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு

சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியா வுக்கும் இடையிலான பங்காளித் துவம் நீண்டகாலத்துக்கு வலு வானதாக நீடிக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இரு மாறுபட்ட நாடுகள் ஆழ மான, நீடித்த தோழமை உறவைக் கொண்டுள்ளதற்கான அடிப்படை காரணத்தை நேற்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்திய போது திரு லீ விளக்கிச் சொன் னார்.

“சிங்கப்பூரின் பரப்பளவைக் காட்டிலும் ஆஸ்திரேலியா கிட்டத் தட்ட 10,000 மடங்கு பெரியது. அதேபோல ஆஸ்திரேலியா பெற் றிருக்கும் அற்புதமான இயற்கை வளங்கள் சிங்கப்பூரிடம் இல்லை. “இரு நாடுகளும் தழுவி இருக்கும் சமூகக் கூறுகளும் வெவ்வேறானவை. ஆஸ்திரே லியா பெரும்பாலும் ஆங்கிலோ =சாக்ஸன் சமூகமாகவும் சிங் கப்பூர் ஆசிய சமூகமாகவும் திகழ்கின்றன.

“பிரதமர் டர்ன்புல் சொல்லியது போல ஆஸ்திரேலியா என்பது பரந்த பழுப்பு நிலமாக இருக்கிற அதே நேரம் சிங்கப்பூர் என்பது ஒரு சிறிய சிவப்புப் புள்ளிதான். “இப்படியெல்லாம் வேறுபாடு கள் இருந்தபோதிலும் சிங்கப்பூ ரும் ஆஸ்திரேலியாவும் சிறந்த தோழர்களாகத் திகழ்வதற்கு அவ்விரண்டு நாடுகளும் அடிப் படையில் ஒரே மாதிரியான உத்தி பூர்வ நலன்களையும் தொலை நோக்கையும் கொண்டுள்ளதே காரணம்,” என்றார் பிரதமர்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் சிங்கப்பூர் பிரதமர் என்னும் சிறப்பைப் பெற்ற திரு லீ. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை