மூன்று இடங்களில் டெங்கி ஒழிப்பு பரிசோதனைத் திட்டம்

டெங்கி காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக பிராடல் ஹைட்ஸ் குடியிருப்புப் பேட்டை யில் வொல்பாசியா பாக்டீரியா கிருமியைக் கொண்டுள்ள ஏடிஸ் கொசுக்கள் விடப்படும். அந்த ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் சேர்ந்து அதனால் ஏற்படக்கூடிய கொசு முட்டைகளை வொல்பாசியா கிருமிகள் கொன்றுவிடும். இதனால் டெங்கி காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் காலப்போக் கில் குறைந்துவிடும். இத்தகைய இதர இரண்டு பரிசோதனைகள் நீசூன் ஈஸ்ட், தெம்பனிஸ் வெஸ்ட் ஆகிய வட்டாரங்களில் அடுத்த மாதத்திற்குள் தொடங்கப்படும்.

இத்தகைய வொல்பாசியா கொசுக்களைப் பரப்பிவிடும் நடைமுறை பற்றி தெரிந்து கொள்ள இந்த மூன்று குடியிருப்புப் பேட்டைகளைச் சேர்ந்த மக்களை தேசிய சுற்றுப்புற வாரியம் ஜூரோங்கில் இருக்கும் சுற்றுப்புற, சுகாதார நிலையத்திற்கு அழைத்து இருக்கிறது. நீசூன் ஈஸ்ட் குடியிருப்பாளர்கள் 30 பேர் நேற்று ஜூரோங் சோதனைச் சாலைக்குச் சென்று கொசுக் களைப் பார்த்தார்கள். இதற்கிடையே, நேற்று புதிதாக ஆறு பேருக்கு ஸிக்கா தொற்று நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. உபி அவென்யூ 1ல் இரண்டு பேருக்கு அந்த நோய் ஏற்பட்டிருந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது. சிங்கப்பூரில் இதுவரையில் 410 பேருக்கு ஸிக்கா நோய் பரவியிருக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது