கடற்படையின் புதிய கப்பல் ‘யூனிட்டி’ வெள்ளோட்டம்

சிங்கப்பூர் குடியரசு கடற்படை, யூனிட்டி (ஐக்கியம்) என்ற தன் னுடைய மூன்றாவது எல்எம்வி கப்பலை நேற்று வெள்ளோட்ட மிட்டது. சிங்கப்பூர் டெக்னா லஜிஸ் மெரின் நிறுவனத்தின் பெனோய் தளத்தில் இந்தக் கப்பல் வெள்ளோட்டமிடப்பட்டது. தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஓங் யி காங் அந்த நிகழ்ச்சியைப் பார்வையிட்டார். திரு ஓங்கின் மனைவி திருமதி டயனா ஓங், கப்பல் வெள்ளோட் டத்தை தொடங்கிவைத்தார். இந்தக் கப்பல் சிங்கப்பூரிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டது. இதைப் போன்ற எட்டு கப்பல்கள் வரும் 2020ல் சேவை யில் ஈடுபடுத்தப்படும்.

'இன்டிபெண்டன்ஸ்', 'சொவிரி னிட்டி' என்ற முதல் இரண்டு எல்எம்வி கப்பல்கள் முறையே சென்ற ஆண்டு ஜூலை 3ஆம் தேதியும் இந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதியும் வெள்ளோட்ட மிடப்பட்டன. அவை இப்போது கடலில் பரிசோதனை ஓட்டத்தில் இருக்கின்றன. கடற்படையில் சுமார் 20 ஆண்டு காலம் சேவையில் இருந்த 'ஃபியர்லஸ்' வகை சுற்றுக்காவல் கலன்களுக்குப் பதிலாக இந்த எல்எம்வி கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இவை கடற்படையின் ஆகப் புதிய கப்பல்கள். இப்போதைய கப்பல்களைவிட இவை வேகமாகச் செல்லக்கூடியவை. விவேகமா னவை. இவை 80மீ. நீளமுள்ளவை. 23 பேர் இதை இயக்கி, நிர்வகிக் கலாம். நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு ஓங், புதிய கப்பல் சிங்கப்பூருக்கே உரிய சீரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். கடற்படை, தற்காப்பு அறிவியல் தொழில்நுட்ப முகவை, எஸ்டி மெரின், தற்காப்பு தொழில்நுட்ப தொழில்துறையின் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் புதிய கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் மெரின் நிறுவனத்தின் பெனோய் தளத்தில் வெள்ளோட்ட மிடப்பட்ட சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் புதிய யூனிட்டி கப்பல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!