மருத்துவ செலவைக் குறைக்க பரிந்துரை

தனியார் துறையில் சிகிச்சைக்­கா­கும் செலவு, பொது மருத்­து­வ­மனை­களில் தனியார் நோயா­ளி­கள் செலுத்­து­வதை­விட மிக அதி­க­மாக உள்ளது. இதற்கு கட்டண வழி­காட்டி முறை இல்­லா­த­து­டன் பெரும்பா­லும் காப்­பு­றுதி நிறு­வ­னங்களே செலவை ஏற்­றுக்­கொள்­வ­தும் கார­ணங்க­ளா­கக் கூறப்­படு­கின்றன. இதனால் காப்­பு­றுதி நிறு­வ­னங்கள் அதிக கட்­ட­ணங்களைக் கட்ட வேண்­டி­யுள்­ளது. எனவே அவை மக்கள் செலுத்த வேண்டிய சந்தா தொகையை உயர்த்­து­ கின்றன. அதி­க­ரித்து வரும் சுகா­தா­ரக் கட்­ட­ணங்களைக் குறைக்­கும் நோக்கில், சிங்கப்­பூர் ஆயுட் காப்­பு­றுதி நிறு­வ­னம், சுகாதார அமைச்சு, சிங்கப்­பூர் நாணய ஆணையம் ஆகி­ய­வற்றைச் சேர்ந்த 11 பேர் கொண்ட பணிக் குழு நேற்றுத் தனது பரிந்­துரை­களை வெளி­யிட்­டது.

அந்தப் பரிந்துரைகளில் சில: போட்­டித்­தன்மைக்கு எதிரானது என்று தற்போது கட்டண வழி­காட்டி முறை நடப்­பில் இல்லை. இதனை மாற்றி கட்டண வழி­காட்டி முறைகளை செயல்­படுத்தி, அளவுக்கு அதி­க­மாக வசூ­லிக்­கப்­படும் கட்­ட­ணங்களை காப்­பு­றுதி நிறு­வ­னங்கள் கண்­டு­பி­டிக்க உத­வு­வது. பொருத்­த­மற்ற அல்லது தேவை­யில்­லாத மருத்­துவ சிகிச்சைகளுக்கு எதிராக காப்­பு­றுதி நிறு­னங்கள் சிங்கப்­பூர் மருத்­துவ மன்றத்­தி­டம் புகார் செய்ய ஏதுவாக தற்­போதைய வழி­முறை­களைச் சீர்­படுத்­து­வது.

செல­வு­களைக் கட்­டுக்­குள் வைக்க ஏதுவாக காப்­பு­றுதி நிறு­வ­னங்கள் தங்களுக்கு ஏற்­புடைய மருத்­துவ சேவை­யா­ளர்­களைத் தேர்வு செய்ய அனு­ம­திப்­பது. மற்ற நாடு­களில் இந்த நடைமுறை உள் ளது. காப்­பு­றுதி நிறு­வ­னங்களின் பட்­டி­ய­லில் இல்லாத மருத்­து­வர்­களையோ, மருத்­து­வ­மனை­க ளையோ நோயா­ளி­கள் நாடலாம். ஆனால் காப்­பு­றுதி நிறு­வ­னங்களி­டம் பெறக்­கூ­டிய தொகையை அது பாதிக்­கும். ஒட்­டு­மொத்த மருத்­துவ கட்­ட­ணத் தொகையை­யும் பெறக்­ கூ­டி­ய­தாக கூடுதல் காப்­பு­றுதி பாது­காப்பை பெற்­றுள்­ள­வர்­களின் எண்­ணிக்கை கூடி­யுள்­ளது. 2011ல் ஐவரில் ஒரு­வ­ராக இருந்த அந்த எண்­ணிக்கை தற்போது மூன்றில் ஒருவர் இத்­தகைய கூடுதல் பாது­காப்பைப் பெற்று உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!