ஓய்வுக்காலத்தில் கைகொடுக்கும் கட்டாயச் சேமிப்பு

முஹம்­மது ஃபைரோஸ்

சிங்கப்­பூ­ரில் வாழ்க்கைத் தரமும் மருத்­துவ வச­தி­களும் அதி­க­ரித்­துள்ள நிலையில் மக்­களின் வாழ்நாளும் அதிகரித்துள்­ளது. இதனா­லேயே ஓய்­வுக்­கா­லத்­திற்­காக சேமிக்­கும் பழக்­கத்தை இளம் பரு­வத்­தி­லி­ருந்தே ஏற்படுத்த வேண்டும் என்றும் அதைத்­தான் மத்திய சேம நிதித் திட்டம் செய்­கிறது என்றும் கூறி­யுள்­ளார் மனி­த­ வள அமைச்­சர் லிம் சுவீ சே. ‘மசேநிதி எதற்­காக இருக்­கிறது?’ எனும் தலைப்­பில் நேற்று முன்­தி­னம் இரவு நடை­பெற்ற ‘பிஏ காப்பி டாக்’ கலந்­துரை­யா­ட­லில் பேசியபோது அவர் இதனைத் தெரி­வித்­தார்.

மசே நிதி திட்­டத்தைப் புரிந்­து­கொள்­வ­தில் மக்கள் சிர­மங்களை எதிர்­நோக்­கு­வ­தால் அத்­திட்­டம் எளிமைப் படுத்­தப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்ட அவர், மசேநிதி திட்டம் உள்­ளிட்ட அர­சாங்கக் கொள்கை­களைக் குடி­யி­ருப்­பா­ளர்­களி­டம் எளிய முறையில் சேர்ப்பதில் அடித்­த­ளத் தலை­வர்­களுக்கு முக்­கி­ய பங்கு உண்டு என்றார்.

அடித்­தள மன்றத்­தில் தமிழில் நடத்­தப்­பட்ட இக்­க­லந்­துரை­யா­டலில் 150க்கு மேற்­பட்ட அடித்­த­ளத் தலை­வர்­கள் பங்­கெ­டுத்தனர். மசே நிதி குறித்து தங்க­ளது குடி­யி­ருப்­பா­ளர்­களின் சார்பில் சந்­தே­கங்களை­யும் கேள்­வி­களை­யும் கேட்டுத் தெளி­வு­படுத்­திக்கொள்­ள­வும் கருத்­து­களைப் பதி­வு­செய்­ய ­வும் கலந்துரையாடல் வாய்ப்­பாக அமைந்தது.

தமிழ் முரசின் செய்தி ஆசி­ரி­யர் திரு வீ. பழ­னிச்­சாமி கலந்­து ரை­யா­டலை வழி­ந­டத்த, தமிழ் முரசின் துணை செய்தி ஆசி­ரி­யர் திரு தமி­ழ­வேல், ஓய்­வுக்­கா­லத்­தில் சுகாதார பரா­ம­ரிப்­புக்குப் போது மான பணம் இருப்­பது, அன்றா­டச் செல­வு­களை எப்படிச் சமா­ளிப்­பது, காலத்­திற்­கேற்ப மசே நிதி வட்­டி­யு­டன் வளரும் முறை, மசே நிதி கவ­னிக்­கும் மூன்று அடிப்­படை தேவைகள் போன்ற அம்­சங்களைப் பற்றி விளக்­கினார்.

தொடர்ந்து இடம்­பெற்ற கேள்வி பதில் அங்கத்­தில், அமைச்­சர் லிம்­மு­டன் செம்ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்ரம் நாயர், மனி­த­வள அமைச்­சின் வருமான பாது­காப்பு, கொள்கை பிரி­வுக்­கான இயக்­கு­நர் ஷான் கோ, மசேநிதி கழ­கத்­தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் சீ பெங் ஆகியோர் கேள்­வி­களுக்குப் பதி­ல­ளித்­த­னர்.

தாம் 55 வயதை எட்­டும்­போது மசே நிதி கணக்­கில் சேமிப்­புத் தொகை நிர்­ண­யிக்­கப்­பட்ட அடிப்­படை ஓய்­வுக்­கா­லத் தொகைக்­கும் குறைவாக இருந்தா­லும் அவசர செல­வு­களுக்­காக அதில் பாதித் தொகையை எடுக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைத்­தார் திரு எம்.பி. மஹாராஜ். அதற்குப் பதி­லத்த திரு லிம், “55 வயதில் உங்கள் கணக்­கில் $50,000 இருக்­கும் பட்­சத்­தில் அதில் பாதித் தொகையை எடுத்து விட்டீர்கள் என்றால் மீதம் $25,000 மட்டுமே இருக்­கும். நீங்கள் 90 வயது வரை வாழ நேரிட்­டால் மீத­முள்ள தொகை உங்களுக்குப் போதாது,” என்றார். மக்­களின் மசே நிதி பணம் உங்களைவிட்டு ஓடி­வி­டப்போவ­தில்லை என்ற அவர், அதற்கு மேலாக மசே நிதி லைஃப் திட்­டத் தின்கீழ் சேமிப்பு நல்ல வட்டி விகி­தத்தை ஈட்டி மேன்­மே­லும் வளரும் என்று உத்­த­ர­வாதம் அளித்­தார். 

வலமிருந்து மனி­த­வள அமைச்­சின் வருமானப் பாது­காப்பு, கொள்கைப் பிரி­வுக்­கான இயக்­கு­நர் ஷான் கோ, தமிழ் முரசின் செய்தி ஆசி­ரி­யர் திரு வீ. பழ­னிச்­சாமி, மனி­த­வள அமைச்­சர் லிம் சுவீ சே, செம்ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்ரம் நாயர், மசே நிதிக் கழ­கத்­தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் சீ பெங், தமிழ் முரசு துணைச் செய்தி ஆசி­ரி­யர் தமி­ழ­வேல். படம்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது

சில்க் ஏர் விமானப் பயணிகளின் 286 பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றி ஒட்டி குழப்பம் விளைவித்த விமான நிலைய ஊழியர் டே பூன் கேவுக்கு 20 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றிய ஆடவருக்கு 20 நாள் சிறை

மியன்மார் பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்கு 47 வயது சுசேனா போங் சிம் சுவானுக்கு ஓராண்டு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேல் முறையீட்டுக்குப் பின் அவரது தண்டனை 8 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்

12 Nov 2019

‘கண்பார்வை போனதற்குத் துன்புறுத்தல் காரணமல்ல’