ஆகஸ்ட்டில் சில்லறை வர்த்தகம் இறங்கியது

சிங்கப்பூரின் சில்லறை வர்த்தகம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓராண் டுக்கு முந்திய நிலவரத்தோடு ஒப்பிடுகையில் 1.1 விழுக்காடு இறங்கியது. அந்த மாதத்தில் மோட்டார் வாகனப் பிரிவைத் தவிர்த்த இதர எல்லாத் துறைகளிலும் சில்லறை வர்த்தகம் வீழ்ச்சி கண்டதாக புள்ளிவிவரத் துறை நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. மோட்டார் வாகனப் பிரிவை விலக்கிவிட்டுப் பார்த்தால் மொத்த சில்லறை வர்த்தகம் அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 2.1 விழுக்காடு சரிவு கண்டுள்ளது தெரியவரும். மாத அடிப்படையிலும் சில்லறை வர்த்தகம் 1 விழுக்காடு இறங் கியது. மோட்டார் வாகனத் துறை தவிர்த்த இதர வர்த்தகத்தின் வீழ்ச்சி 6.5 விழுக்காடாகும்.

இதர துறைகள் சரிவைக் கண்டாலும் மோட்டார் வாகன சில்லறை வர்த்தகம் ஆகஸ்ட் மாதத்தில் ஓராண்டுக்கு முந்திய நிலவரத்தைக் காட்டிலும் 30.4 விழுக்காடு ஏற்றம் கண்டது. அந்த மாதத்தில் ஏற்றம் கண்ட ஒரே துறை மோட்டார் வாகன சில்லறை வர்த்தகம்தான். அதேபோல, ஆக மோசமான சரிவைக் கண்டது கணினி, தொலைத்தொடர்புச் சாதனங்கள் துறை. அதன் வர்த்தகம் 19.6 விழுக்காடு இறங்கியது. கைக் கடிகாரம், ஆபரணத் துறை 15 விழுக்காடும் ஆடை, காலணிகள் துறை 11.2 விழுக்காடும் சரிந்தன. சில்லறை விற்பனைத் தொகை ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை நீக்கி கணக்கிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்

2012ல் கேரோசல் நிறுவனத்தை (இடமிருந்து) மார்கஸ் டான், குவெக் சியூ ருய், லுகாஸ் நூ ஆகியோர் தொடங்கினர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு