மெதுவடைந்த பொருளியல் வளர்ச்சி

ஆண்டுக்காண்டு அடிப்படையில் சிங்கப்பூர் பொருளியல் மூன்றாம் காலாண்டில் 0.6% என்னும் மெதுவான வளர்ச்சியைச் சந்தித்தது. பருவத்திற்கேற்ப சரிக்கட்டப் படும் வருடாந்திர அடிப்படையில் பார்த்தால் இந்தச் சரிவு 4.1 விழுக்காடாகும் என வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று வெளி யிட்ட முன்னோடி மதிப்பீடுகள் தெரிவித்தன. முன்னுரைப்பைக் காட்டிலும் இது மிகவும் குறைவான வளர்ச்சி ஆகும். சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த மாதம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் மூன்றாம் காலாண்டுப் பொரு ளியல் 1.7 விழுக்காடு வளரும் என்று முன்னுரைத்து இருந்தனர். அத்துடன், இதற்கு முந்திய காலாண்டைக் காட்டிலும் வளர்ச்சி குறைந்திருக்கிறது.

ஜூன் வரையிலான இரண் டாம் காலாண்டில் பொருளியல் 2 விழுக்காடு வளர்ந்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது போன்ற உலக நிலவரங்களை அடிப்படை யாக வைத்துக் கணித்த பொருளியலாளர்கள், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூர் பொருளியல் மங்கிய நிலையில் இருக்கும் என பெரிதும் எதிர்பார்த்தனர். இது தவிர, இந்த ஆண்டு முழுமைக்குமான பொருளியல் வளர்ச்சி 1 விழுக்காட்டுக்கும் 2 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாங்கம் முன்னுரைத்து இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!