‘பார்க் அண்ட் ரைட்’ திட்டம் டிசம்பர் 1 முதல் நிறுத்தப்படும்

காரை அருகில் உள்ள கார் நிறுத் துமிடத்தில் நிறுத்திவிட்டு, பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் ‘பார்க் அண்ட் ரைட்’ திட்டம் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய வர்த்தக வட்டாரத்திற் குச் செல்லும் வாகனமோட்டிகளை பொதுப்போக்குவரத்துக்கு மாறி பயணம் செய்ய ஊக்குவிக்கும் நோக்கத்தில் 1975ஆம் ஆண்டில் இத்திட்டம் அறிமுகமானது. தற்போதைய திட்டத்தின்படி, வழக்கமாக ‘பார்க் அண்ட் ரைட்’ பயனாளர்கள் இருவித அட்டைகளை வாங்க வேண்டும். ஒன்று, மாதத்துக்கு ஒரு முறை பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதற்கான ‘இஸி-லிங்க்’ அட்டை.

மற்றொன்று, தேர்ந்தெடுக் கப்பட்ட கார் நிறுத்துமிடத்தில் தங்கள் கார்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டணக் கழிவில் வழங்கப்படும் கார் நிறுத்த வில்லை. கடந்த சில ஆண்டுகளாக ‘பார்க் அண்ட் ரைட்’ திட்டத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்துள்ளது. நாள்தோறும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் இரண்டு மில்லியன் பயணிகளில் 2,000க்கும் குறைவான வழக்கமான பயனாளர்கள் ‘பார்க் அண்ட் ரைட்’ திட்டத்தைப் பயன்படுத்துகிறார் கள் என்று ஆணையம் குறிப்பிட்டது. இவர்களில் பாதிப் பேர்தான் தங்கள் கார்களை நிறுத்திவிட்டுப் பொதுப் போக்குவரத்தில் செல்கின்றனர். சில கார் நிறுத்துமிடங் களில் ஐந்தில் ஒருவர்தான் இவ்வாறு செய்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளாக ‘பார்க் அண்ட் ரைட்’ திட்டத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தலையை வேனில் மோதியதால் குழந்தை இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. படம்: ஃபேஸ்புக்

12 Nov 2019

தலையை காரில் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; தாயின் ஆண் நண்பர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்