முஃப்தி: இணையச் சூதாட்டம் மிகவும் கவலை தரும் போக்காக உள்ளது

இணையச் சூதாட்­டம் உட்பட மொத்­தத்­தில் சூதாட்­டத்­தின் கடும் விளை­வு­கள் பற்­றி­யும் சூதாட்­டம் என்பது இஸ்­லாத்­தில் கண்­டிப்­பாக தடை செய்­யப்­பட்ட ஒன்று என்றும் முஸ்லிம் தலைவர்கள் தங்கள் முஸ்லிம் சமூ­கத்தினருக்கு நினை­வூட்டி உள்­ள­னர். சிங்கப்­பூ­ரின் முஃப்தி டாக்டர் முகம்­மது ஃபட்­ரிஸ் பக்­கா­ரத்­தின் தலைமை­யி­லான முஃப்தி அலுவலகம் நேற்று வெளி­யிட்ட அறிக்கையை நேற்றைய வெள்ளிக் கிழமை பகல்­நேர தொழுகை பிர­சங்கத்­தின்­போது பள்­ளி­வா­சல்களின் இமாம்­கள் வாசித்து காட்டினார்கள்.

இணையச் சூதாட்­டம் தற்போது மிகவும் கவலை தரும் போக்காக மாறி­யுள்­ளது என்று முஃப்தி அலு வலகம் வர்­ணித்­துள்­ளது. "சூதாட்­டம் தனி ஒருவரை மட் டும் பாதிக்­கா­மல் ஒட்­டு­மொத்த குடும்பத்தை­யும் சமூ­கத்தை­யும் பாதிக்­கும். ஒருவர் சூதாட்­டத்­துக்கு அடிமை­யாகி விட்டால், அவர்­கள் தங்கள் சுய­கட்­டுப்­பாட்டை இழக்கிறார்கள். பெரும்பா­லான சமயங்களில் சட்­டத்­துக்­குப் புறம்பான செயல்­களி­லும் தங்களை ஈடு­படுத்திக் கொள்­ளக்­கூடும்," என்று பிர­சங்கத்­தில் கூறப்­பட்­டது.

சிங்கப்­பூர் முஸ்லிம் சமூகத் துக்குத் தேவையான சமூக-சமய வழி­காட்­டி­கள் வெள்ளிக்கிழமை பிர­சங்கத்­தின் மூலம் தெரி­விக்­கப் படு­கின்றன. இணையச் சூதாட்­டச் சட்டம் ஈராண்­டு­களுக்கு முன் நாடாளு மன்றத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தைத் தொடர்ந்து உள்துறை அமைச்சு கடந்த மாதம் சிங்கப்பூ ரைத் தள­மா­கக் கொண்ட இரு சூதாட்­டப் பந்தய நடத்­து­நர்களுக்கு அனுமதி வழங்­கிய பிறகு முஸ்லிம் சமூ­கத்­தி­ட­மி­ருந்து இந்த அறிக்கை வெளி­வந்­துள்­ளது.

மேற்­கண்ட சட்டம் அனைத்து இணைய, தொலைபேசி மூலம் நடத்­தப்­படும் பந்த­யப் பிடிப்பு நட வடிக்கை­களுக்­கும் அனுமதி அளிக்­கிறது. சூதாட்­டப் பந்த­யப் பிடிப்பு நடத்­து­நர்­களில் ஒன்றான சிங்கப் பூர் பூல்ஸ் நிறு­வ­னம் தனது இணையச் சூதாட்­டப் பந்த­யப் பிடிப்பை இம்­மா­தம் 25ஆம் தேதி தொடங்­கு­ கிறது. மற்றோர் நிறு­வ­ன­மான சிங் கப்பூர் குதிரைப் பந்த­யச் சங்கம் தனது புதிய பந்த­யப் பிடிப்பு நடவடிக்கையை இணையம் மூலமாகவும் கைபேசி மூல­மா­க­வும் நவம் பர் 15ஆம் தேதி தொடங்­கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!