மதிப்பெண் ஒன்றே குறியாகக் கூடாது

பள்ளிக்கூடங்களில் மாணவர் கள் ஏட்டுக் கல்வி மதிப்பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிப்பதைக் குறைப்பதற்கான முதல் நடவடிக்கைகளை கல்வி அமைச்சும் பள்ளிக்கூடங்களும் எடுக்கத் தொடங்கியிருப்பதாக தற்காலிக கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் தெரிவித்திருக்கிறார். "ஏட்டுக் கல்வி மதிப்பெண்கள் முக்கியம். அதனால் அறிவு வளர்கிறது. ஆனால் கடுமை யாகப் படிப்பது என்பது அதிக மதிப்பெண் வாங்குவதற்குத் தான் என்று சொல்ல முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

ஏட்டுக் கல்வி ஒருபுறம் இருக்க, நன்னெறிகளைக் கற்றுக்கொள்வது உள்ளிட்ட மாணவர்களின் இதர அறிவும் அந்த அளவுக்கு முக்கியம் என்று அமைச்சர் கூறினார். நன்யாங் வட்டாரத்திற்கு நேற்று தன்னுடைய முதலாவது அமைச்சர் நிலை வருகை மேற்கொண்ட திரு இங், ஜூரோங் வெஸ்ட்டில் இருக்கும் நன்யாங் சமூக மனமகிழ் மன்றத்தில் குடியிருப்பாளர்கள், மாணவர் களுடன் கலந்துரையாடலில் உரையாற்றினார். ஏட்டுக் கல்வியின் முக்கியத் துவம் குறித்து ஒரு மாணவர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்தார். சிங்கப்பூரர்கள் அல்லாத மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் கல்விக் கட்ட ணம் அதிகரிக்கிறது. தொடக் கப்பள்ளி இறுதித்தேர்வு மதிப் பெண்கள் முறை மாற்றியமைக் கப்படுகிறது.

தற்காலிக கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் 'நன்யாங்கில் ஓவியக் கலைகள்' என்ற கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். படம்: சாவ் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!