‘மாத்திரைகளைப் பிள்ளைகளுக்கு எட்டாமல் வையுங்கள்’

பிள்ளைகளுக்குக் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்த கொடுக்கக்கூடிய மாத்திரைகள் இப்போது பல வண்ணங் களில் வருகின்றன. வாழைப்பழம், செர்ரி போன்ற சுவை களிலும் அவை கிடைக்கின்றன. இதனால் அந்த மாத்திரை கள் பிள்ளைகளுக்குப் பெரும் கவர்ச்சியாக இருக்கின்றன. இப்படி இருப்பதால் மிட்டாய் என்று நினைத்து அந்த மாத்தி ரைகளைப் பிள்ளைகள் சாப்பிட்டுவிட்ட சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

ஆகையால் இத்தகைய மாத்திரைகளைப் பிள்ளைகளின் கைகளுக்கு எட்டாமல் பத்திரமாக மறைத்து வைக்கும்படி மருந்தாளர்கள் பெற்றோருக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் கள். வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்துடன் சேர்ந்து சிங்கப்பூர் மருந்தாளர்கள் சங்கம், உட்லண்ட்ஸ் சிவிக்ஸ் சென்டரில் நேற்று சுகாதாரச் சந்தை ஒன்றை நடத்தியது. அதில் வலியுறுத்திக் கூறப்பட்ட தகவல்களில் இந்த மாத்திரை பற்றிய எச்சரிக்கையும் ஒன்றாக இருந்தது.

‘நார்த் வெஸ்ட்டில் நமது சொந்த உடல்நலம்’ என்ற இந்தச் சந்தை ஆண்டுதோறும் நடக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைக் கவனித்துக்கொள்ள இது ஊக்கமூட்டும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக ஒன்று முதல் ஐந்து வயது வரையுள்ள பிள்ளைகள் தவறுதலாக இத்தகைய மாத்திரைகளை விழுங்கிவிடுவது உண்டு என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் மருந்தாளர் எஸ்தர் ஆங் தெரிவித்தார். இருமல், காய்ச்சல் போன்ற சிறுசிறு நோய்களை எப்படி தவிர்ப்பது என்பது பற்றியும் நேற்றைய சந்தை மக்களுக்குப் போதித்தது. பல மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியிருக் கும் முதியவர்கள் குழப்பம் அடையாமல் மாத்திரைகளைப் பயன்படுத்தவும் நேற்றைய சந்தை கற்றுக் கொடுத்தது. போக்குவரத்து அமைச்சரும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கோ பூன் வான் சந்தையின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இத்தகைய சந்தைக்கு ஏற்பாடு செய்த அமைப்புகளுக்கும் தொண்டூழியர் களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ