திறன்களை வளர்த்துக்கொள்ள ஊக்குவிப்பு

ப. பாலசுப்பிரமணியம்

தகவல் தொடர்பு, ஊடக, வடிவ மைப்புத் துறையினர் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள் ளவும் வாழ்நாள் கற்றலை ஊக்கு விக்கவும் தொடர்பு, தகவல் அமைச்சு கிட்டத்தட்ட 1,000 கல்வி விருதுகளை வழங்கியது. சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் சுமார் 800 உயர்கல்வி மாணவர்களுக்கும் இத்துறை களில் இடம்பெற்று தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் நபர்களுக்கும் இவ்விருதுகள் கடந்த வியாழக் கிழமை கிடைத்தது.

சிவகுமார் கோபால்

இவ்விருது நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட 33 தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் உபகாரச் சம்பள விருது பெற்றவர்களில் சிவகுமார் கோபாலும் ஒருவர். வங்கியின் தகவல் தொழில் நுட்பத் துறையில் துணைத் தலைவர் பொறுப்பு வகிக்கும் சிவகுமார், இணையப் பாதுகாப் புத் துறையில் முதுகலைப் பட்டம் பயிலவுள்ளார். தன் பணிக்கு இணையப் பாதுகாப்பு மிக முக்கிய அம்ச மென்றும் இதில் திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் அடுத்தகட்ட வேலை பொறுப் புகளுக்குத் தம்மை தயார்ப்படுத் திக்கொள்ள முடிகின்றது என் றும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இணையப் பாதுகாப்புத் துறையில் ஆய்வு மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டு அதில் ஆலோசனை வழங்கும் சேவையில் ஈடுபட இவர் விருப் பம் தெரிவித்தார்.

சன்ஜே தேவராஜா

நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட 140 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' கல்வி விருதுகளைப் பெற்றவர்களில் 'வசந்தம்' தமிழ்ச் செய்தியின் முன்னாள் படைப்பாளரான சன்ஜே தேவராஜாவும் ஒருவர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் அனுப வம் பெற்றுவிட்டு முதுகலைப் பட்டம் மேற்கொள்ள இதுவே சரி யான தருணம் என்று கருதும் இவர், தற்போது முழு நேரமாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தகவல் தொடர்பு துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்கிறார். படிப்பு முடிந்து மீண்டும் ஊட கத் துறையில் சேர விருப்பம் தெரிவித்தார் 31 வயது சன்ஜே. நடப்பு விவகாரங்கள் தொடர் பில் வசந்தம் ஒளிவழியில் தன் சொந்த உரையாடல் நிகழ்ச்சியை வழிநடத்துவதில் ஆர்வம் உள் ளது என்று கூறும் சன்ஜே, கல்விச் செலவின் பாரத்தை இந்த உதவித் தொகைக் குறைக்க உதவுகின்றது என்றும் தன் திறன்களை இதற்குப் பிற கும் மேம்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கிறது என்றும் சொன் னார். இந்தக் கல்வி விருது மூலம் படிப்பை மேற்கொள்ளும் காலகட்டத்தில் இவருக்கு $5,000 உதவித் தொகை வழங்கப்படும்.

தமிழவேல்

'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' கல்வி விருதைப் பெறும் மற்றொருவர் தமிழ் முரசின் துணைச் செய்தி ஆசிரியர் தமிழவேல். இவர் தற்போது மெர்டோக் பல்கலைக்கழகத்தின் மின்னியல் தகவல் சாதனத் துறையில் பட்டப்படிப்பு மேற்கொள்கிறார். "மின்னியல் ஊடகக் கால கட்டத்தை அரவணைத்து அதன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு எதிர்காலச் சவால்களுக்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். மின்னியல் ஊடகத்தைப் பயன்படுத்தி செய்திகளை மக்களுக்கு விரிவாகவும் சுவாரசியமாகவும் சென்ற டைவதற்குத் தேவையான திறன்களை நான் கற்று வருகிறேன்," என்றார் 37 வயது தமிழவேல். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்ட தகவல் தொடர்பு அமைச்சர் டாக்டர் யாக் கூப் இப்ராஹிம் தொழில்நுட்பத் தில் ஏற்படும் துரித மாற்றங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்குகின்றன என்றும் அதற்கு புதிய திறன்கள் தேவைப்படுகின் றது என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30,000 வேலை வாய்ப்புகள் தகவல் தொடர்புத் துறையில் உருவாக்கப்படும் என் றும் அவர் தெரிவித்தார்.

தொடர்பு, தகவல் அமைச்சின் விருது நிகழ்ச்சியில் கல்வி விருதுகளைப் பெற்ற (இடமிருந்து) திரு சிவகுமார் கோபால், திரு தமிழவேல், திரு சன்ஜே தேவராஜா. படம்: தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!