‘சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வி- நேற்று, இன்று, நாளை’ ஆய்வரங்கு

வில்சன் சைலஸ்

தமிழ்­மொ­ழிக் கற்­பித்­த­லின் கடந்த­கால வளர்ச்­சியை ஆராய்ந்து நவீன காலத்­திற்கு ஏற்ப மாண­வர்­களி­டம் மொழி சார்ந்த ஆர்­வத்தை ஏற்­படுத்­தும் முயற்­சி­யில் சிங்கப்­பூர் தமிழா சிரியர் சங்கம் நேற்று முன்­தி­னம் ஈடு­பட்­டது. தமிழ்­மொழி கற்­பித்­த­லுக்­கான அணு­கு­முறை கடந்த ஐம்பது ஆண்­டு­களில் எவ்வாறு மாறியுள் ளது என்­பதை­யும் தற்­போதைய சூழலில் தமி­ழா­சி­ரி­யர்­கள் எதிர் கொள்ளும் சவால்­களை­யும் பற்றி கலந்­துரை­யா­டு­வதற்கு ஆய்வ ரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது சங்கம்.

‘சிங்கப்­பூ­ரில் தமிழ்­மொ­ழிக் கல்வி-நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்­பில் நடை­பெற்ற இந்த ஆய்­வ­ரங்­கில், ‘த ஹெட் ஃபவுண்­டே­ஷன்’ அமைப்­பின் கல்வி இயக்­கு­ந­ரான பேரா­சி­ரி­யர் எஸ் கோபி­நா­தன் சிறப்பு விருந் தின­ரா­கக் கலந்­து­கொண்டு பல் லின மொழிகள் கொண்ட சிங்கப் பூரில் தமிழ்­மொ­ழியைக் கட்டிக் காக்கும் அவ­சி­யத்தை எடுத்து ரைத்தார்.

“உல­க­ம­ய­மா­கி­வ­ரும் சூழலில் மொழி­களின் மீதுள்ள ஆர்­வத்தை இளை­யர்­களி­டம் ஏற்­படுத்­து­வது சவாலான ஒன்று. ஆனால், பல் லின மக்கள் வாழும் சிங்கப்­பூ­ரில் சிறு­பான்மை­யி­ன­ராக இருக்­கும் தமி­ழர்­களுக்­குத் தமிழ்­மொழி ஓர் அடை­யா­ளம்,” என்றார் அவர். இத்­து­டன், தனிப்­பட்ட விதத் தில் அனை­வ­ரும் இரு­மொ­ழித் திறன் கொண்ட­வர்­க­ளா­க­த்தான் திகழ்­கின்ற­னர் என மேலும் கூறிய திரு கோபி­நா­தன், நான்கு அதி­கா­ரத்­து­வ­ மொ­ழி­கள் கொண்ட சிங்கப்­பூ­ரில் ஆசி­ரி­யர்­கள் தமிழ்மொழியை மாணவர் களுக்­குக் கற்­பிப்­ப­தில் முக்கிய பங்கு வகிக்­கின்ற­னர் என்றார்.

தாய்­மொ­ழிக் கொள்கை­கள் பற்றி பேரா­சி­ரி­யர் கோபி­நா­தன் எழு­தி­யுள்ள ஆய்வுக் கட்டுரை களையும் அடிப்­படை­யா­கக் கொண்டு தமி­ழா­சி­ரி­யர்­கள் தங் கள் சுய ஆய்வுக் கட்­டுரை­களை முன்வைத்­த­னர். ‘கல்­வி­யில் மொழிக்­கொள்கை, தாய்­மொ­ழிப் பாட­மா­கத் தமிழ் மொழி’, ‘சிங்கப்­பூர் தமிழ்­மொழி குடும்ப­மொ­ழி­யா­வ­தும் பயன்­படுவ தும்’, ‘சிங்கப்­பூ­ரில் இரு­மொ­ழிய மும் இருமொழிக் கல்­வி­யும்’ என்ற தலைப்­பு­களின் கீழ் தொடக்கநிலை, உயர்­நிலை, தொடக்­கக் கல்­லூ­ரியைச் சேர்ந்த ஆசி­ரி­யர்­கள் தங்கள் கட்­டுரை­களைப் படைத்தனர்.

‘சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வி-நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்பிலான ஆய்வரங்கில் உரையாற்றுகிறார் பேராசிரியர் எஸ் கோபிநாதன் (வலது). படம்: சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது