கேகே மருத்துவமனையின் கின்னஸ் உலகச் சாதனை

சிங்கப்பூரில் பிறந்தவர்களில் முக் கால்வாசிக்கு மேற்பட்டவர்கள் கேகே மருத்துவமனையில் பிறந்த வர்களாகத்தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு ஒரு சாதனை மருத்துவமனையாக அது திகழ்ந்து வந்துள்ளது. நேற்று பீஷான் விளையாட்டரங் கில் நடைபெற்ற சமூகக் குடும்ப கேளிக்கை விழாவில் கேகே மருத்துவமனை உலகச் சாதனை நிகழ்த்தியது. இந்த விழாவில் ‘கேகே மருத்­து­வ­மனை­யில் பிறந்த­வர்­கள்’ என்ற சிறப்பு அங்க­மும் இடம்­பெற்­ றது. கின்னஸ் உலகச் சாதனையை நிகழ்த்த கேகே மகளிர், சிறார்­ மருத்­து­வ­மனை­யில் பிறந்த 2,241 பேர் அங்கே திரண்ட­னர்.

ஏழு வயது முதல் 84 வயது வரையில் உள்­ள­வர்­கள் தங்களின் அடையாள அட்டை, பிறப்புச் சான்­றி­தழ்­களைக் கொண்டு வந்து தாங்கள் கேகே மருத்­து­வ­மனை­யில் பிறந்த­வர்­கள் என்பதை நிரூ ­பித்­த பின்னரே சாதனை எண் ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப் பட்டனர். ‘அதே மருத்­து­வ­மனை­யில் பிறந்த­வர்­களில் அதி­க­மா­னோர் ஒன்­று­­ ­கூடு­தல்’ என்ற தலைப்­பில் புதிய கின்னஸ் சாதனை நிகழ்­த்தப்­­­பட்­டது.

இதற்கு முன் பிலிப்­பீன்ஸ்­சில் உள்ள ‘மெடிக்­கல் சிட்டி’ மருத்­து­வ­மனை 2015 ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அதன் மருத்­துவமனையில் பிறந்த 1,221 பேரைத் திரட்டி கின்னஸ் சாதனை படைத்தது. நேற்றைய நிகழ்வில் இந்தப் புதிய சாதனை நிகழ்த்த சில உள் ளூர் நிறுவனங்களையும் அரசாங்க அமைப்புகளையும் சேர்ந்த குழுக் கள் கலந்துகொண்டன. இன்னொரு கின்னஸ் சாத னையை கேகே மகளிர், சிறார்­ மருத்­து­வ­மனை 50 ஆண்டு களுக்கு முன் நிகழ்த்தி அந்த சாதனையை 10 ஆண்டுகள் வரை தக்­க வைத்திருந்தது.

பல்வேறு காலகட்டங்களில் கேகே மருத்துவமனையில் பிறந்தவர்கள் நேற்று பீஷான் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்று கின்னஸ் உலகச் சாதனையை நிகழ்த்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது