எஸ்எம்ஆர்டி நிறுவனத்தை தெமாசெக் முழுமையாக வாங்க ஒப்புதல் கிட்டியது

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றான எஸ்எம்ஆர்டியை முழுமையாக வாங்குவதற்கு உயர் நீதிமன்றம் தெமாசெக் ஹோல்டிங்ஸுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் தெமாசெக் ஹோல்டிங்ஸ் பெற்றுக் கொள்ளும் என்பதால், சிங்கப்பூர் பங்குச் சந்தையிலிருந்து அது விலகிக் கொள்ளும். எஸ்எம்ஆர்டி பங்கு பரிவர்த்தனை நடைபெறும் இறுதி நாள் இன்று அக்டோபர் 18ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்எம்ஆர்டி பங்குகளை வைத்திருப்போருக்கு அதற்கான தொகை நவம்பர் 1ஆம் தேதிக்குள் அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு எஸ்எம்ஆர்டி நிறுவனம் சிங்கப்பூர் பங்குச் சந்தை பட்டியலிலிருந்து மீட்டுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 29ஆம் தேதி நடத்தப்பட்ட வாக்களிப்பில் எஸ்எம்ஆர்டி பங்குதாரர்கள் அந்நிறுவனத்தை தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் முழுமையாக வாங்கிக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் எஸ்எம்ஆர்டி நிறுவனம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கத்தின் வசம் சென்றுவிடும். அதே வாக்களிப்பு நாளில் பங்குதாரர்கள் எஸ்எம்ஆர்டி தனது செயல்முறை சொத்துகளை நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் $1 பில்லியனுக்கு விற்க பெரும்பான்மையாக வாக்களித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை