பணித்திறனை மேம்படுத்த புதிய உள்துறை நிலையம்

தரவையும் அறிவியலையும் பயன் படுத்தி உள்துறை அதிகாரிகளின் பணித்திறனை மேம்படுத்தி, பணி யைச் சுலபமாக்கும் வழிமுறைகளை ஆராய புதிய நிலையம் நேற்று தொடங்கப்பட்டது. சாமர்த்தியமான கண்காணிப்பு முறைகள், மெய்நிகர் பயிற்சி, உள் துறை அதிகாரிகளின் பணிச்சூழல் சார்ந்த உடலியல், மனோவியல் தேவைகள் போன்றவற்றைப் புதிய நிலையம் ஆராயும். அதிகாரிகளின் சோர்வைச் சமாளித்தல் போன் றவை இதில் உள்ளடங்கும். பழைய சுவா சூ காங்கில் உள்ள உள்துறை பயிற்சிக் கல் லூரியில் அமைந்திருக்கும் புதிய நிலையம், அறிவியல், தொழில் நுட்பம், அதிகாரிகளின் செயல் திறன் பற்றிய தரவு ஆராய்வுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அடித்தளப் பணிகளுக்கு அதிகாரி கள் பயன்படுத்தும் செயல்முறைகளும் சாதனங்களும் பொருத்தமாக இருப்பதை உறுதிப்படுத்தும்.

நான்கு அறை வீட்டின் அள விலான இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையம், பாரம் பரிய முறைகளிலிருந்து வேறுபடும் பயிற்சி முறைகளையும் உருவாக் கும். எடுத்துக்காட்டாக, மெய்நிகர் பாவனைகளைப் பயன்படுத்தி அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்து, அவர்களது கண் அசை வும் பதில்நடவடிக்கைகளும் கண் காணிக்கப்படும். ஆளில்லாமல் இயங்கும் சாதனங்களைக் கட்டுப் படுத்தவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படலாம்.

உள்துறைக் குழு அதிகாரிகளின் பணி குறித்த அறிவியல், தொழில்நுட்ப ஆற்றல்களை மேம்படுத்தும் புதிய நிலையத்தை நேற்று தொடங்கி வைத்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துக்கும் உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமினுக்கும் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ