‘டிஎச்எல்’ நிறுவனத்தின் $140 மில்லியன் மையம்

'டிஎச்­எல் எக்ஸ்­பி­ரஸ்' புதிய $140 மில்­லி­யன் மையத்தை சாங்கி விமான நிலை­யத்­தின் சரக்கு மையத்தில் நேற்று திறந்து வைத் தது. தெற்­கா­சிய வட்டாரத்தின் விமான சரக்குப் போக்குவரத்து மையமாகத் திகழும் 'டிஎச்­எல்' தெற்காசிய மையம் 24 மணி நேரமும் தானி­யக்க முறையில் இயங்­கும். அந்த நிறு­வ­னத்­தின் ஆகப்­பெரிய சிங்கப்பூர் முதலீடு இது என்று தெரிவிக்­கப்­பட்­டது. 23,600 சதுர மீட்டர் பரப்­ப­ள­வில் அந்த மையம் அமைந்­துள்­ளது. தானி­யக்க முறையில் விரை­வா­கப் பொட்­ட­லங்களை வரிசைப்­ படுத்­தும் சேவையை முதன் முதலாக தெற்­கா­சி­யா­வில் பயன்­படுத்­தும் நிறு­வ­னம் அது என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்தத் துரி­தச் ­சேவை­யால் தனது வாடிக்கை­யா­ளர்­கள் பயன் அடை­வார்­கள் என்று நிறு­வ­னம் நம்பிக்கை தெரிவித்தது.

முழுமை­யான தானி­யக்க முறை யில் செயல்­படு­வ­தால் ஒரு மணி நேரத்­திற்கு 24,000 சரக்­கு­களையும் ஆவ­ணங்களையும் வகைப்­படுத்த முடியும். இந்தப் புதிய மையத்தில் இவ் வாண்டு இறுதிக்குள் 250 ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்தப் போவதாக நிறுவனம் தெரி­வித்­ தது. தொழில்­நுட்­பத்தைப் பயன் படுத்தி உற்­பத்­தித் ­தி­றனை நிறுவனங்கள் மேம்படுத்த வேண்டும் என்று அர­சாங்கம் ஊக்­கு­விக்­கும் வேளையில் இந்த மையம் தொடங்கப்­பட்­டி­ருக்­கிறது. "இந்த வட்டாரத்தில் ஹாங்காங், பேங்காக், ஷாங்காய் ஆகிய நகரங்களில் கிளை நிறுவனங் களை இயக்கி வரும் 'டிஎச்­எல் எக்ஸ்­பி­ரஸ்' மலேசியா, இந் தோனீசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் சேவை அளிக்கும்," என்று தெரிவித்தார் 'டிஎச்­எல் எக்ஸ்­பி­ரஸ்' நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டார தலைமை நிர்வாக அதிகாரி கென் லீ.

டிஎச்எல் ஊழியர் ஒருவர் விமான சரக்கைத் தயார்ப்படுத்துகிறார். படம்: டிஎச்எல்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!