‘ஜெடிசி’ கீழ் வீவக நிலம், சொத்து செயல்படும்

வீவக எனும் வீடமைப்பு வளர்ச்­­­­­­­சிக் கழ­­­­­­­கத்­­­­­­­தின் கீழ் உள்ள தொழில்­­­­­­­துறை நிலங்களும் சொத்­­­­­­­து­­­­­­­களும் இனி 'ஜெடிசி'(JTC) நிறு­­­­­­­வ­­­­­­­னத்­­­­­­­தின் கீழ் வர­­­­­­­வி­­­­­­­ருப்­­­­­­­ப­­­­­­­தாக நேற்று தெரி­­­­­­­விக்­­­­­­­கப்­­­பட்­­­டது. 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்­­­­­­­டுக்­­­­­­­குள் இந்த மாற்றம் நடப்­புக்கு வரும். இந்தத் தகவலை வர்த்­­­­­­­தக தொழில் அமைச்­­­­­­­சர் (வர்த்­த­கம்) திரு லிம் ஹங் கியாங் நேற்று அறி­­­­­­­வித்­­­­­தார். 'கிரிட்சோ சிங்கப்­பூர்', 'குவோக்­சின் மெனுஃ­பேக்சரிங்' 'ராயல் பூசான்' ஆகிய மூன்று நிறு­­­­­­­வ­­­­­­­னங்களும் நேற்று நிலக் ­­­­­குத்­­­­­­­தகை உடன்­­­­­­­பாட்­­­­­­­டில் கையெழுத்­­­­­­­திட்­­­­­­ட நிகழ்ச்­சி­யின்போது அமைச்­சர் பேசினார்.

சிறிய நடுத்­­­­­­­தர நிறு­­­­­­­வ­­­­­­­னங்களின் வளர்ச்­­­­­­­சிக்கு இந்த மாற்றம் உதவும் என்றார் அமைச் ­­­­­சர். இனி அனைத்து தேவை­­­­­ களுக்­­­­­­­கும் நிறு­­­­­­­வ­­­­­­­னங்கள் ஒரே அமைப்பை நாடலாம் என்றார் அவர். மேலும் நிறு­­­வ­­­னங்களின் வளர்ச்­­­சிக்­கேற்ப அவற்றின் இடத் தேவையும் மாறும். நிறு­­­வ­­­னங்களுக்குச் சிறந்த முறையில் உதவ இந்த மாற்றம் வழி வகுக்­­­கும் என்று அவர் விளக்­கினார். இந்தப் புதிய மாற்­றத்­தால் அர­சாங்கம் புதிய தொழில்­­­­­­­துறை வட்­­­­­­­டா­­­­­­­ரங்களுக்­­­­­­­கு­­­­­­­ரிய விரிவான பெருந்­­­­­­­திட்­­­­­­­டத்தை வரைய உதவும் என்றும் எதிர்­­­­­­­பார்க்­­­­­­­கப்­படு­­­­­­­கிறது.

தற்போது வீடமைப்பு வளர்ச்­­­சிக் கழ­­­கத்­­­தின் கீழ் உள்ள 10,700 தொழில்­­­துறை பகு­­­தி­­­களும் 540 தொழில்­­­துறை நிலக்­­­குத்­­­தகை­­­களும் ஜெடி­­­சிக்கு மாற்­­­றப்­­­படும். அடுத்த இரண்டு மாதங்களில்­ குத்­­­­­­­தகை­­­­­­­யா­­­­­­­ளர்­­­­­­­கள், வர்த்­­­­­­­த­­­­­­­கச் சங்கங்கள் போன்ற தரப்­­­­­­­பு­­­­­­­களு­­­­­­­டன் தாங்கள் கலந்­­­­­­­தா­லோ­சிக்க இருப்­ப­தா­க ஜெடிசியும் வீவகவும் நேற்று இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!