விபத்தில் ஐவர் காயம்

உட்லண்ட்சில் புதன்கிழமை காலை நேரத்தில் டாக்சியும் தனியார் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். உட்லண்ட்ஸ் அவென்யூ 6, உட்லண்ட்ஸ் டிரைவ் 65 இரண்டும் சந்திக்கும் இடத்தில் காலை 6.30 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நிகழ்ந்ததையடுத்து டாக்சி ஓட்டுநர் அந்த வாகனத்தின் உள்ளே மாட்டிக்கொண்டார்.

அவரை குடிமைத் தற்காப்புப் படை மீட்டது. காயம் அடைந்த நால்வரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்னர் என்று இந்தப் படை தெரிவித்தது. விபத்தில் சிக்கிய டாக்சி ஓட்டி தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்கிறார் என்று தெரியவந்தது. காயம் அடைந்த நால்வரும் டாக்சி பயணிகள். பயணிகளில் மூன்று பேரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்ததையடுத்து குடிமைத் தற்காப்புப் படை நான்கு மருத்துவ வண்டிகள் உட்பட பல வாகனங்களை அங்கு அனுப்பியது. இந்த சம்பவம் குறித்து புலன் விசாரணை நடப்பதாக போலிஸ் தெரிவித்தது.

உட்லண்ட்சில் டாக்சி ஒன்றும் தனியார் பேருந்தும் விபத்துக்குள்ளாயின. படம்: ஃபேஸ்புக்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்

2012ல் கேரோசல் நிறுவனத்தை (இடமிருந்து) மார்கஸ் டான், குவெக் சியூ ருய், லுகாஸ் நூ ஆகியோர் தொடங்கினர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு