மூப்படையும் மக்கள்தொகை: உதவிக் கட்டமைப்பு உதயம்

சிங்கப்பூரை எதிர்நோக்கும் சுகாதாரப் பராமரிப்புச் சவால்களைச் சமாளிக்க உதவும் வகையில் நேற்று ஒரு புதிய சுகாதாரப் பரா மரிப்புக் கட்டமைப்பு தொடங்கப் பட்டது. அந்தக் கட்டமைப்பில் மருத்துவமனைகளும் பல்கலைக் கழகங்களும் இடம்பெற்றிருக்கின் றன. சுகாதாரத் துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று இதனை அறிவித்தார். ‘சுகாதாரப் பராமரிப்பு புத்தாக்க கற்றல் கட்டமைப்பு’ என்பது புதிய கட்டமைப்பிற்குப் பெயர். அந்தக் கட்டமைப்புக்கான புதிய நிலையம், உள்ளூர், வெளிநாட்டுக் கல்வி நிலையங்களை ஐக்கியப்படுத்தி சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள் தொகை தேவைகளை நிறைவேற் றும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அதோடு, மெதுவடைந்து வரும் ஊழியரணி வளர்ச்சிப் பிரச் சினைக்குத் தீர்வுகாணவும் அது உதவும் என்றார் அமைச்சர். புதிய கட்டமைப்பை, டான் டோக் செங் மருத்துவமனையும் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமமும் அமைத்துள்ளன. அதில் மொத்தம் 21 அமைப்புகள் சேர்ந்து இருக்கின்றன. சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பெரும்பாலும் மருத்துவமனை யில் இத்தகைய சேவையை வழங்கி வருகிறார்கள். இந்த சேவையைச் சமூக பராமரிப்பு சேவையாக அவர்கள் வழங்க ஏதுவாக தேவையான பயிற்சிகளை அவர்களுக்கு அளிப் பதில் இந்தப் புதிய முயற்சி ஒரு மித்த கவனம் செலுத்தும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். முதியோரைக் கவனித்துக் கொள்ள வசதியாக மேலும் சமூகப் பராமரிப்பு ஆதரவு ஊழியர்களை பயிற்சி அளித்து உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் கள் நோயாளிகளின் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றத் தேவைப்படும் முக்கிய பணிகளில் ஒருமித்த கவனம் செலுத்த அனு மதிக்கும் வகையில், இந்தப் பரா மரிப்பில் மனித இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்தும் ஆரா யப்படும். முதியோர்களைப் பராமரிக்கும் வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்திருந்தார். அதற்கு அடுத்த நாளன்று இந்தப் புதிய கட்டமைப்பு தொடங்கப்பட் டிருக்கிறது. சிங்கப்பூருக்கு 2020வது ஆண்டு வாக்கில் மேலும் 30,000 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தேவைப்படுவார்கள் என்று அமைச் சர் தெரிவித்து இருந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

தேசிய மரபுடைமைக் கழகத்தின் நல்லிணக்க நடைப் பயணங்கள் தொடரில் நேற்று ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு வந்த வருகையாளர்களுக்கு அக்கோயிலின் அறங்காவலர் ப. சிவராமன் கோயிலின் வரலாறு பற்றியும் அங்குள்ள வழிபாட்டு நடைமுறைகளையும் விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

ஏழு வழிபாட்டு இடங்களுக்கு நல்லிணக்க நடைப் பயணங்கள்

மெக்னல்லி லசால் வளாகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், லசால் கலைக் கல்லூரியின் பீட்டர் சியா, ஸ்டீவ் டிக்சன், நீ ஆன் கொங்ஸியின் உதவி தலைவர் ரிச்சர்ட் லீ, நீ ஆன் கொங்ஸியின் தலைவர் ஜெமி டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Nov 2019

லசால் 12 மாடி கட்டடத்துக்கு $50 மி. நன்கொடை