ஆண்டுக்கு மேலும் 500 சமூகச் சேவை ஊழியர்கள் தேவை

சிங்கப்பூரில் சமூக சேவைக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் துறையில் ஆண்டுக்கு மேலும் 500 ஊழியர்கள் தேவைப் படுகிறார்கள் என்று தேசிய சமூக சேவை மன்றம் தெரிவித்தது. சமூக சேவைத் துறையில் இப்போது ஏறக்குறைய 16,000 நிபுணர்கள், உதவி தேவைப்படும் பல்வேறு பிரிவினருக்கு உதவி வருகிறார்கள். இந்தத் துறையில் ஊழியர் களின் எண்ணிக்கையை அதி கரிக்க இந்த மன்றம் தன் முயற்சி களை விரிவுபடுத்தியிருக்கிறது.

“பல்வேறு பிரிவினரையும் எட்ட பலதரப்பட்ட செயல்திட்டங்களை யும் நாங்கள் ஆராய்ந்து வரு கிறோம். எதிர்காலத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்க விரும்பு வோரைத் தேடி வருகிறோம்,” என்று இந்த மன்றத்தின் துணைத் தலைமை நிர்வாகி ஃபெர்மின் டெய்ஸ் தெரிவித்தார். சமூக சேவைக் கழகத்தின் பட்டமளிப்பு, விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதனை யொட்டி திரு டெய்ஸ் இந்த விவரங்களைத் தெரிவித்தார். கடுமையான உழைப்பு, முன் உதாரணமான செயல்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்திய சமூக சேவை நிபுணர்கள் 300 பேர் நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் 25 அமைப்பு களைச் சேர்ந்த லாப நோக்கற்ற துறைத் தலைவர்கள் 26 பேர் பட்டம் பெற்றனர். லாப நோக்கற்ற அமைப்புகளுக்கான தலைமைத் துவச் செயல்திட்டத்தில் பட்டம் பெற்ற திரு பால் லோங் என்பவர், 25 ஆண்டு காலம் தனியார் துறை யில் பணியாற்றி பிறகு சேவைத் துறையில் தலைமைத்துவப் பணி ஒன்றை மேற்கொண்டார். சமூகத்திற்குத் தொண்டாற்றக் கூடிய பொருள்பொதிந்த வேலையே தனது விருப்பம் என்று இவர் கூறினார்.