சிங்கப்பூர்- ஆந்திரப் பிரதேசம் நிதித்துறை தொழில்நுட்ப உடன்பாடு கையெழுத்து

சிங்கப்பூர் நாணய ஆணையமும் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச அரசாங்கமும் நேற்று நிதித்துறை தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன் பாடு ஒன்றில் கையெழுத்திட்டன. தங்கள் சந்தையில் நிதித்துறைச் சேவைகளில் புத்தாக்கத்தை மேம் படுத்துவது அந்த உடன்பாட்டின் நோக்கம். அந்த உடன்பாட்டின் கீழ் ஆணையமும் ஆந்திரப்பிரதேச அரசாங்கமும் கணினிமய பணப் பட்டுவாடா போன்ற தொழில்நுட்பங் களில் கூட்டுப் புத்தாக்கத் திட்டங் களை ஆராயும். நிதித்துறைத் தொழில்நுட்பம் தொடர்பான போதனைச் செயல்திட்டங்கள், பாடத்திட்டங்களை உருவாக்க அவை ஒத்துழைக்கும்.

நிதித்துறையில் இடம்பெறும் புத்தாக்கங்கள் தொடர்பான ஒழுங் குமுறைப் பிரச்சினைகள் பற்றிய கருத்துகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும், நிதித் துறைத் தொழில்நுட்பத்தில் இடம்பெறும் புதிய போக்குகளைப் பற்றி விவா திக்கவும் அந்த இரு அமைப்புகளும் இணக்கம் கண்டிருக்கின்றன. புதிய உடன்பாடு சிங்கப்பூருக் கும் ஆந்திரப் பிரதேசத்துக்கும் இடையில் நிதித்துறைத் தொழில் நுட்பத்தில் அதிகம் ஒத்துழைக்க வழியை ஏற்படுத்தித் தரும் என்று ஆணையத்தின் நிதித்துறைத் தொழில்நுட்பத் தலைமை அதிகாரி சோப்னெண்டு மொகந்தி குறிப் பிட்டார். ஆணையத்தைப் பொறுத்தவரையில், சிங்கப்பூரில் உருவாக்கப்படும் நிதித்துறைத் தொழில்நுட்பத் தீர்வுகளுக்கு இந்தியச் சந்தையில் இடத்தைப் பெற நாங்கள் முயல்கிறோம் என்றும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!