நகர மன்ற நிதி நிலைமை தாமதம்; விளக்கும் அமைச்சு

அல்ஜுனிட்- ஹவ்காங் நகர மன்றம் அதன் 2015ஆம் ஆண்டிற்கான நிதி அறிக் கைகளை தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம் பாசிர் ரிஸ்- பொங்கோல் நகர மன்றத்தைப் பாதித்ததாக நேற்று தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது. அல்ஜுனிட்- ஹவ்காங் நகர மன்றத்தை தவிர்த்து அனைத்து நகர மன்றங்களும் தங்கள் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளைச் சமர்ப்பித்து விட்டதாகவும் கிடைக்கப்பெற்ற அனைத்து அறிக்கைகளும் நாடா ளுமன்றத்தில் முன்வைக் கப்பட்ட தாகவும் அமைச்சு கூறியது.

தங்களின் நிதி அறிக்கைகள் தொடர்பாக 16 நகர மன்றங்களில் 14 மன்றங்களின் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும் பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்ற அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டவில்லை என்றும் தணிக்கையாளர் நேற்று தெரிவித்தார். பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதியின் கணக்குகளை சரிபார்த்து உறுதிசெய்ய பாசிர் ரிஸ் பொங்கோல் நகர மன்றத் தால் இயலாமல் போனதால்தான் இந்த நிலை என்று தணிக்கையாளர் விவரித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரின் பொருளியல் 3வது காலாண்டில் மீண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த காலாண்டில் பொருளியல் 0.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

சிங்கப்பூர் பொருளியல் 0.5 விழுக்காடு வளர்ச்சி

கோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்