வந்துவிடு என்றது மரணம், வாழ்ந்துவிடு என்றது இதயம்

திருவாட்டி கிறிஸ்டியன் சியா என்ற 41 வயது மாதுக்கு 2007ல் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. திரு சைமன் ஓங் என்ற அந்த மாதின் கணவர் தன்னுடைய இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தன் மனைவிக்குத் தானமாகக் கொடுத்தார். அந்தச் சிறுநீரகம் குறிப்பிட்ட காலத்திற்குதான் வேலை செய்யும் என்பது அவர்களுக்குத் தெரியும். மனைவியை மரணம் அழைக் கிறது என்பது தெரிந்தும் மனம் உடைந்துவிடாமல் இருவரும் கூடு மானவரை மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள். கடைசியாக திருமதி சியா, சிங்கப்பூர் பொது மருத்துவமனை யில் செவ்வாய்க்கிழமை காலமா னார். அவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டது. அதனால் இரவல் சிறு நீரகத்திற்கும் பிரச்சினை ஏற்பட் டுவிட்டது-. மரணப் படுக்கையில் இருந்த மனைவியிடம் கணவர் திரு ஓங் மனம்விட்டு பேசினார்.

“உன்னை அடைந்தது என் பாக்கியம். அதற்கு மிக்க நன்றி. என்னை கொடுத்துவைத்த ஒரு வராக உணர வைத்த பெண்மணி நீ. அதற்குள் உன்னை இழக்க நான் தயாராகவில்லை. உன்னுடன் இன்னும் வாழ எனக்கு மேலும் காலம் வேண்டும். ஆனால் அதற் குள் உன் ஆயுள் முடிந்துவிட்டதை நினைத்து எனக்கு மிகவும் சிரம மாக இருக்கிறது,” என்று கணவர் மனைவியிடம் கூறினார். திருமதி சியாவின் நல்லுடல் மண்டாய் தகனச் சாலையில் சனிக்கிழமை எரியூட்டப்பட்டது.

திரு ஓங்கும் அவருடைய மனைவியும் 17 வயதில் சந்தித்து கொண்டார்கள். 26 ஆவது வயதில் திருமணம் செய்துகொண் டார்கள். மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார் கள். திடீரென்று ஒரு நாள் அந்த மாதுக்கு சிறுநீரகக் கோளாறு பற்றிய செய்தி இடிபோல் தாக்கி யது. ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச் சையும் பலனளிக்கவில்லை. அதனால் தன்னுடைய ஒரு சிறு நீரகத்தை மனைவிக்குத் தானமாக கொடுக்க உடனே கணவர் முன் வந்தார். இருவரின் ரத்தமும் ஒத்துப்போயின. “என் மனைவி அப்போது ஏறக்குறைய மரணத்தை தழுவி விட்டார். ஆனால் என்னுடைய சிறுநீரகம் அவரைக் காத்தது. இருந்தாலும் இத்தகைய இரவல் சிறுநீரகம் நீண்டகாலத்திற்குச் செயல்படாது என்பதை நான் இணையத்தில் படித்துத் தெரிந்து கொண்டேன். அது 12 ஆண்டு காலம் தாக்குப்பிடிக்கும்,” என்று எதிர்பார்த்தேன் என்றார் திரு ஓங்.

கணவர் சைமன் ஓங் கொடுத்த சிறுநீரகத்தின் உதவியுடன் ஒன்பது ஆண்டு காலம் வாழ்ந்த மனைவி திருமதி சியா. படம்: சைமன் ஓங்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பானத்தைக் குடித்த திருவாட்டி வாங், அதில் கண்ணாடித் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். படங்கள்: திருவாட்டி வாங்

19 Nov 2019

சிறுவன் குடித்த 'ஸ்மூதி'யில் கண்ணாடித் துகள்கள்; மன்னிப்புக் கோரிய உணவகம்

கணவருடன் சேர்ந்து $191,000 தொகையை மோசடி செய்த லூயிஸ் லாய் பெய் சியனுக்கு சிறைத் தண்டனை. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு 17 மாதச் சிறை

பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய 42 வயது ஜெனி சான் யுன் ஹுவிக்கு 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

பணிப்பெண் வதை; பெண்ணுக்கு சிறை