சிங்கப்பூரில் கால் பதிக்கும் அலாடின் குழுமம்

முஹம்மது ஃபைரோஸ்

உலகிலேயே முதன்முறையாக ‘ஹலால்’ சான்றிதழ் அளிக்கப்பட்ட உயர்ரக பொருட்களை மின் வணிகம் மூலம் விற்பனை செய் வதில் பெருமை கொள்ளும் அலாடின் குழுமம் இப்போது வர்த் தகத்தை விரிவுபடுத்தும் முயற்சி யின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் கால் பதித்துள்ளது. அக்குழுமம், ‘AladdinStreet. com.sg’ எனும் இணையத்தள முகவரியை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21) அதிகாரபூர்வமாக தொடங்கிவைத்தது. சிங்கப்பூர் சந்தையில் நுழையப் போவதாக இவ்வாண்டு ஜூலை யில் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து 200க்கு மேற்பட்ட வணிகர்களை அடையாளம் கண்ட ‘அலாடின் ஸ்த்ரீட் சிங்கப் பூர்’ நிறுவனம், அவற்றிலிருந்து கிட்டத்தட்ட 60 வணிகர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த இணையத் தளத்தில் இஸ்லாமியர்களும் பிற சமய உரிமையாளர்களும் ஹலால் சான் றிதழ் அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர். அவற்றுள் உணவு பானம், வைட்டமின்கள், ஒப்பனைப் பொருட்கள், மருந்து வகைகள், நாகரிக உடைகள் உள்ளிட்ட பல தரப்பட்ட பொருட்கள் அடங்கும். பங்காளித்துவக் கூட்டு முயற்சியின் மூலம் ஏற்கெனவே 29 நாடுகளில் மின் வணிகம்வழி முத்திரை பதித்துள்ள அலாடின் குழுமம் சீனாவிலும் வணிகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

ஹலால் பொருட்கள் தரும் சுகாதார பலன்கள் குறித்து முஸ்லிம் ஆதிக்கம் அல்லாத நாடு களிலும் அதிக வரவேற்பு கிடைப்ப தாக தெரிவித்தார் அலாடின் குழுமம் நிறுவனர்களில் ஒருவரான டாத்தோ டாக்டர் ஷேக் முசாஃபர் ‌ஷுகோர் அல் மஸ்ரி. நம்பகமான தளங்கள் இல்லாத தால் ஹலால் துறையில் உற்பத்தி யாளர்களால் இத்தகைய பொருட் களுக்கான தேவையை 20% மட்டுமே பூர்த்திசெய்ய முடிகிறது. வட்டார அளவில் ஹலால் பொருட் களை அதிகம் இறக்குமதி செய் யும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று,” என்றார் அவர்.

AladdinStreet.com.sg மின் வணிகத் தளத்தை அதிகாரபூர்வமாக திறந்து வைக்கும் முன்னாள் வெளியுறவு மூத்த துணை அமைச்சர் ஸைனுல் அபிடீன் ர‌ஷீட் (நடுவில்). அலாடின் குழும நிறுவனர்களில் ஒருவரான டாத்தோ டாக்டர் ஷேக் முசாஃபர் (வலமிருந்து 2வது), அலாடின் சிங்கப்பூர் நிறுவனத் தலைவர் டாத்தோ டாக்டர் கிரேஸ் கோங் (இடமிருந்து 2வது) உடன் உள்ளனர். படம்: அலாடின் ஸ்த்ரீட் சிங்கப்பூர்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது