தாதிமை இல்லங்களில் ஒரு படுக்கை, இரு படுக்கை அறை பற்றி அமைச்சு

தாதிமை இல்லங்களை ஒரு படுக்கை அல்லது இரண்டு படுக்கைகளைக் கொண்டவையாக மாற்றிவிட்டால் பராமரிப்பு வசதிக்குச் சங்கடம் ஏற்பட்டுவிடும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது. லியன் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லீ போ வா, அண்மையில் ஒரு பேட்டி அளித்திருந்தார். முதியோர் பராமரிப்பில் இந்த அறநிறுவனம் போன்ற அமைப்புகள் ஆற்றும் பணி பற்றி அந்தப் பேட்டியில் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சு, தாதிமை இல்லங்களில் ஒரு படுக்கை அல்லது இரண்டு படுக்கை அறைகளை மட்டும் அமைத்தால் கட்டுமானச் செலவு கிட்டத்தட்ட இரண்டு மடங்காகிவிடும் என்பது அனுபவ ரீதியாக தெரியவந்ததாகக் குறிப்பிட்டது.

அதோடு மட்டுமின்றி, நடைமுறைச் செலவும் கணிசமாக அதிகரித்துவிடும். கூடுதலாக இத்தகைய இல்லங்களை கட்ட வேண்டிய தேவையும் ஏற்பட்டுவிடும் என்று அமைச்சு தெரிவித்தது. தாதிமை இல்லங்களில் ஒரு படுக்கை அல்லது இரண்டு படுக்கை அறைகள் மட்டுமே இருந்தால் செலவு அதிகரித்துவிடும். இந்தச் செலவை கடைசியில் நோயாளிகளும் அவர்களின் குடும்பங்களும், வரி செலுத்து வோரும்தான் ஏற்க வேண்டியிருக்கும் என்றது அமைச்சு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது

சில்க் ஏர் விமானப் பயணிகளின் 286 பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றி ஒட்டி குழப்பம் விளைவித்த விமான நிலைய ஊழியர் டே பூன் கேவுக்கு 20 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றிய ஆடவருக்கு 20 நாள் சிறை

மியன்மார் பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்கு 47 வயது சுசேனா போங் சிம் சுவானுக்கு ஓராண்டு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேல் முறையீட்டுக்குப் பின் அவரது தண்டனை 8 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்

12 Nov 2019

‘கண்பார்வை போனதற்குத் துன்புறுத்தல் காரணமல்ல’