$43மி. இணையப் பாதுகாப்பு ஆய்வுக்கூடம் தொடக்கம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மும் சிங்டெல் நிறுவனமும் $43 மில்லியன் இணையப் பாதுகாப்பு ஆய்வுக்கூடத்தைத் தொடங்கி யிருக்கின்றன. இணைய மிரட்டல்களை ஒடுக்குவதற்காக புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கும் நோக் கத்தில், அதிகாரபூர்வ தேசிய ஆய்வு அறநிறுவனத் திட்டம் ஒன்றின்கீழ் இத்துடன் 10 ஆய்வுக் கூடங்கள் அமைந்துள்ளன.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகமும் சிங்டெல் நிறுவனமும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் $43 மில்லியன் தொகையை புதிய ஆய்வுக்கூடங்களில் செலவிடும். கணினித் தகவல்களைப் பகுத்தாராய்வது, இணையத்தில் தலைகாட்டும் அழிவுபூர்வமான காரியங்களைத் தானாகவே கண்டுபிடிக்கும் இயந்திரம் முத லானவற்றில் இந்த முதலீடு இடம் பெறும். ‘என்யுஎஸ்- சிங்டெல் இணை யப் பாதுகாப்பு ஆய்வு உருவாக்க ஆய்வுக்கூடம்” என்று குறிப் பிடப்படும் புதிய ஆய்வுக்க்கூடம், இந்தப் பல்கலைக்கழகத்தின் கணினிப் பள்ளியில் அமைந் திருக்கும். துணைப் பிரதமரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் புதிய ஆய்வுக்கூடத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

“இணைய மிரட்டல்கள் அதிக ரித்து வருகின்றன. புதிய புதிய பாணியில் அவை இடம்பெறுகின் றன. இவற்றைச் சமாளிக்க எப்போதுமே நாம் ஆயத்தமாகி வரவேண்டும்,” என்று திரு டியோ குறிப்பிட்டார். சிங்கப்பூரில் இணையப் பாது காப்பு நிபுணத்துவர்களின் எண் ணிக்கையை அதிகரித்து, அவர் களின் ஆற்றலைப் பெருக்குவது இந்தப் புதிய ஆய்வுக்கூடத்தின் முக்கியமான காரியங்களில் ஒன் றாக இருக்கும் என்றும் திரு டியோ தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ