ஜூரோங் ஏரி தோட்டங்கள்: குத்தகை கொடுக்கப்பட்டது

ஜூரோங் மத்திய, கிழக்கு ஏரி தோட்டங்களுக்கு வடிவமைப்பு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக தேசிய பூங்கா வாரியம் குத்தகை ஒன்றை கொடுத்திருக்கிறது. லியு & ஊ ஆர்க்கிட்டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் லேண்ட்ஸ் கேப் டிசைன் மற்றும் எஸ்ஏஎல்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறு வனங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ள ஒரு குழுவிற்கு அந்தக் குத்தகை கொடுக்கப் பட்டிருக்கிறது. ஜூரோங் ஏரி தோட்டங்கள் 90 ஹெக்டேர் பரப் பளவில் அமையும் சிங்கப்பூரின் புதிய தேசிய தோட்டங்களாக இருக்கும்.

ஜூரோங் ஏரி மேற்குத் தோட்டம், ஜூரோங் ஏரி மத்திய தோட்டம், ஜூரோங் ஏரி கிழக்குத் தோட்டம் ஆகிய மூன்றும் அந்த நிலப்பரப்பில் அமையும் ஜூரோங் ஏரி தோட்டங்களாகும். ஜூரோங் ஏரி தோட்டங்கள் மக்கள் தோட்டங்களாக இருக் கும். அவை குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் இடமளிக்கும் நில வடிவமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் என்று பூங்கா வாரியம் தெரிவித்துள்ளது. ஜூரோங் ஏரி மத்திய தோட் டம், கிழக்குத் தோட்டத்திற் கான வடிவமைப்புகளை மக் களின் காட்சிக்கு இந்த வாரியம் வைக்கும். அவற்றைப் பார்த்து பொதுமக்கள் தங்கள் கருத்து களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!