ஜூரோங் பறவைப் பூங்காவின் முன்னாள் ஊழியருக்கு நான்கு மாதச் சிறை

ஜூரோங் பறவைப் பூங்காவின் முன்னாள் ஊழியர் ஒருவர் அந்நிறுவனத்தின் நிதியிலிருந்து $61,887=ஐக் கையாண்ட குற்றத்துக்காக நேற்று நான்கு மாதச் சிறைத் தண்டனை பெற்றார். பறவைப் பூங்காவில் செயல்முறை அதிகாரியாகப் பணி யாற்றிய ஜே‌ஷீன் ஜேம்ஸ் எனும் 24 வயது மாது, 2015ஆம் ஆண்டு ஜனவரி 5 முதல் ஆகஸ்ட் 12 வரை உள்ள விற் பனைத் தொகையிலிருந்து பணத்தைக் கையாடல் செய்து நம்பிக்கை மோசடிக் குற்றம் புரிந்தார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஜே‌ஷீன் கையாடல் செய்த தொகை அனைத்தும் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. கையாடல் செய்த பணத்தை ஜே‌ஷீன் சொந்த செலவுக ளுக்காகப் பயன்படுத்திக்கொண்டார்.

ஜே‌ஷீனுக்காக வாதாடிய வழக்கறிஞர் சுதா நாயர், "ஒரு சிறந்த சுற்றுலா வழிகாட்டியாக விளங்கிய ஜே‌ஷீனுக்கு 2012ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் வெள்ளி விருது வழங்கி சிறப்பித்தது. ஜே‌ஷீனின் தாயார் ஓர் ஒற்றைப் பெற்றோர். ஜே‌ஷீன் தான் கையாடல் செய்த பணத்தை மாதாந்தர வீட்டுக் கடனை அடைக்கவும் குடும்பச் செலவுகளுக்காவும் தமது சகோதரரின் பல்கலைக்கழகக் கட்டணத்துக்காகவும் தனது டிப்ளோமா கட்டணத்துக்காகவும் தாயாரின் மருத் துவச் செலவுகளுக்காகவும் தாயாருக்காக பணிப்பெண் அமர்த்துவதற்காகவும் பயன்படுத்திக்கொண்டார்.

தனது குற்றத்துக்காக ஜே‌ஷின் மிகவும் வருந்துகிறார் என்று கூறி, தண்டனையைக் குறைக்க கோரிக்கை விடுத்தார். இத்தகைய குற்றத்துக்குப் பொதுவாக ஏழாண்டு சிறை கிடைக்கக்கூடும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!