புது தோற்றம், தலைமையுடன் தி நியூ பேப்பர் நாளிதழ்

வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து மை பேப்பருடன் இணைந்து தி நியூ பேப்பர் நாளிதழ் புதிய தோற்றத்துடன் வாசகர்களின் கைகளில் தவழ இருக்கிறது. புதிய தி நியூ பேப்பரை வாசகர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, தி நியூ பேப்பரின் இணையத்தளத்தி லிருந்து செய்திகளைத் தொடர்ந்து பெறலாம். புதுப் பொலிவுடன் காட்சி அளிக்க இருக்கும் தி நியூ பேப்பரின் அறிமுக நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. டிசம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து தி நியூ பேப்பர் நாளிதழின் ஆசிரியராகப் பொறுப் பேற்க இருக்கும் திரு யூஜின் வீ அதன் புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்தினார். 42 வயது திரு வீ 1996ஆம் ஆண்டில் வேலை அனுபவப் பயிற்சி நிமித்தம் தி நியூ பேப்பர் நாளிதழ் அலுவலகத்துக்குள் காலடி எடுத்து வைத்தவராவார்.

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உபகாரச் சம்பளத்தைப் பெற்று தொடர்பியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திரு வீ, 1999ஆம் ஆண்டில் செய்தியாளராக தி நியூ பேப்பரில் வேலைக்குச் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து செய்தி ஆசிரியரான திரு வீ, இனி அந்நாளிதழின் ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று தலைமை தாங்க இருக்கிறார்.2016-10-25 06:00:00 +0800

தி நியூ பேப்பர் நாளிதழின் புதிய ஆசிரியராகப் பதவி ஏற்கவிருக்கும் திரு யூஜின் வீ. படம்: தி நியூ பேப்பர்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது

சில்க் ஏர் விமானப் பயணிகளின் 286 பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றி ஒட்டி குழப்பம் விளைவித்த விமான நிலைய ஊழியர் டே பூன் கேவுக்கு 20 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றிய ஆடவருக்கு 20 நாள் சிறை

மியன்மார் பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்கு 47 வயது சுசேனா போங் சிம் சுவானுக்கு ஓராண்டு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேல் முறையீட்டுக்குப் பின் அவரது தண்டனை 8 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்

12 Nov 2019

‘கண்பார்வை போனதற்குத் துன்புறுத்தல் காரணமல்ல’