புதிய சமிக்ஞை முறை அமலாவதில் தாமதம்

வடக்கு- தெற்கு ரயில் பாதைக் கான புதிய சமிக்ஞை முறை அமலாவதில் தாமதம் ஏற்பட் டுள்ளது. குறைந்த நேர இடைவெளியில் ரயில்கள் சேவை வழங்கும் நோக் குடன் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் புதிய சமிக்ஞை முறை அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. புதிய சமிக்ஞை முறையை நடைமுறைக்குக் கொண்டு வரு வதற்கு முன்பு கூடுதல் சோதனை தேவைப்படுகிறது. சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்து புது சமிக்ஞை முறை அமல்படுத்தப் பட்டால் 120 வினாடிகள் இடை வெளிக்குப் பதிலாக 100 வினாடி இடைவெளியில் ரயில் சேவை வழங்கப்படும் என்று நிலப் போக்கு வரத்து ஆணையம் கூறியது.

இதற்கான மேம்பாட்டுப் பணி கள் 2012ஆம் ஆண்டில் தொடங் கின. இவ்வாண்டு இறுதிக்குள் இப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறைந்த நேர இடைவெளியில் ரயில் சேவையை வழங்குவதன் மூலம் வடக்கு- தெற்கு ரயில் பாதையில் கூட்ட நெரிசலைக் குறைக்கலாம். புதிய சமிக்ஞை முறையை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கூடுதல் சோதனைகளை நடத்தி அதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப் படும் என்று ஆணையம் குறிப் பிட்டது.

தைப்பே, லண்டன் போன்ற நகரங்களில் ரயில் சேவை வழங்கும் நிறுவனங்களும் புதிய சமிக்ஞை முறையை நடை முறைக்குக் கொண்டு வருவதற்கு முன்பு தீவிர சோதனை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் அவற்றின் சமிக்ஞை முறையை ஏற்கெனவே மேம்படுத்தியுள்ளன. வடக்கு- தெற்கு ரயில் பாதை யில் புதிய சமிக்ஞை சாதனங்கள் பொருத்தப்பட்டு விட்டதாக ஆணையம் கூறியது. கிழக்கு- மேற்கு ரயில் பாதையில் இந்தப் பணி கிட்டத்தட்ட 80 விழுக்காடு நிறைவடைந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை