ஒரே வாரத்தில் கிழக்கு - மேற்கு ரயில் சேவையில் 4வது தடை

கிழக்கு - மேற்கு எம்ஆர்டி ரயில் பாதையில் நேற்றுக் காலை பூகிஸ் ரயில் தடத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாரத்தில் கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட நான்காவது சேவை தடை இது. மேற்குப் பகுதியில் இருந்து பூகிஸ் நிலையத்தை நோக்கி வரும் ரயில்கள் தாமதமாக வந்தன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட ரயில் பாதையில் ரயில்கள் மெதுவாக சென்றதாக எஸ்எம் ஆர்டி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. காலை உச்சநேரத்திற்குப் பிறகுதான் பொறியாளர்கள் பாதிக்கப்பட்ட தடத்தைப் பார்வையிட முடியும் என்றும் நிறுவனம் சொன்னது. எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பாசிர் ரிஸ் நிலையத்திலிருந்து பூகிஸ் நிலையத்திற்கு பயணம் செய்ய கூடுதலாக 15 நிமிடம் ஆகும் என்று நேற்றுக் காலை 8.43 மணிக்கு தெரிவித்தது.

மீண்டும் சுமார் இருபது நிமிடங்கள் கழித்து பயண நேரம் இருபது நிமிடங்கள் ஆகும் என்று காலை 9.05 மணிக்கு அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. அதன் பின்னர் காலை 11.30 மணிக்கு பயணச்சேவை வழக்க நிலைக்கு திரும்பிவிட்டதாக அது அறிவித்தது. காலை உச்சநேரம் காரணமாக பயணிகள் தங்கள் பயண நேரத்தில் கூடுதல் நேரத்தைச் செலவிட நேரிட்டது. பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ