நாட்டைவிட்டு கள்ளத்தனமாக தப்ப முயன்றவர் கைது

சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயன்ற பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 30 வயது ஆடவர் ஒருவர் கைதாகியிருக்கிறார். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட் டதாகக் கூறப்படும் இதர இரண்டு பங்ளாதேஷ் நாட்டினரும் பிடிபட்டு உள்ளனர்.  குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையமும் (ஐசிஏ) போலிசும் கூட்டாக விடுத்த அறிக்கை இந்த விவரங்களைத் தெரிவித்தது. உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி யில் பணியில் இருந்த அதிகாரி களுக்கு இம்மாதம் 25ஆம் தேதி இரவு சுமார் 11.20 மணிக்கு ஒரு தகவல் வந்தது. ஜோகூர் கடற்பாலம் நெடுகிலும் இருக்கும் தண் ணீர் குழாயை நோக்கி ஒருவர் நீந் திச் செல்கிறார் என்று அதிகாரி களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 

உடனடியாக ‘ஐசிஏ’ அதிகாரி களும் போலிஸ், கடலோரக் காவல் படை அதிகாரிகளும் அந்த ஆட வரைத் தேடினர். தண்ணீர் குழாய்க்கு அடியில் அந்த ஆடவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கைதானார்.  அவர் அனுமதிக்கப்பட்ட காலத் திற்கு மேல் சிங்கப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. இதற்கிடையே, கடலோரக் காவல் படை உட்லண்ட்ஸ் வாட்டர்ஃபிரன்ட்டில் இருக்கும் சாலையோர அடைப்புத் தகட்டில் ஜீன்ஸ் கால்சட்டை தொங்கியதைக் கண்டனர். இதற்கு முன்னதாக சுற்றுக்காவலில் இருந்த இரண்டு போலிஸ் அதிகாரிகள் 34 மற்றும் 37 வயது மதிக்கத்தக்க இரண்டு பங்ளாதேஷ் நாட்டினரிடம் விசா ரணை மேற்கொண்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜூரோங்கில் உள்ள ஜாலான் டெருசனில் வீசப்பட்ட பொருட்கள். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

13 Nov 2019

பொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்