உற்பத்தித் துறை எதிர்பாராத எழுச்சி

இவ்­வாண்டு செப்­டம்பர் மாதத்­தில் உற்­பத்­தித் துறை, சென்ற ஆண்டின் அதே மாதத்தை ஒப்­பு­நோக்க 6.7% வளர்ச்சி கண்டது. கடந்த இரண்டரை ஆண்­டு­களில் உற்­பத்­தித் துறையின் ஆகச் சிறந்த மாதாந்­திர வளர்ச்சி இதுதான். இதற்­கு­முன் 2014 மார்ச் மாதத்­தில் அத்துறை 12.2% வளர்ச்சி கண்­டி­ருந்தது. அதிக மாறு­தலைச் சந்­திக்­கும் உயிர்­ம­ருத்­து­வத் துறையைத் தவிர்த்து உற்­பத்­தித் துறை 3.5% வளர்ச்சி அடைந்தது. மாதாந்­திர அடிப்­படை­யில், கடந்த ஆகஸ்ட் மாதத்தை­விட செப்­டம்ப­ரில் உற்­பத்­தித் துறை 3.3% உயர்வு கண்டது. உயிர்­ ம­ருத்­து­வத் துறை நீங்க­லாக, அதன் வளர்ச்சி 0.9 விழுக்­கா­டாக இருந்தது.

முன்­ன­தாக, 2016 செப்­டம்ப­ர் மாதத்­தில் உற்­பத்­தித் துறை 1.2% சரியும் எனப் பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் கணித்­தி­ருந்த­னர். 2015 செப்­டம்பரை ஒப்­பு­நோக்க இவ்­வாண்டு செப்­டம்ப­ரில் உயிர்­ம­ருத்­து­வத் துறை 22.2% வளர்ச்­சி­யடைந்தது. கடந்த செப்­டம்பர் மாதத்­தில் உயிர்­ம­ருத்­து­வத் துறையின் வளர்ச்சி 26.9 விழுக்­கா­டா­க­வும் மருத்­து­வத் தொழில் ­நுட்­பத் துறையின் வளர்ச்சி 9.6 விழுக்­கா­டா­க­வும் இருந்தது. ஒட்­டு­மொத்­த­மாக, 2015ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களை­விட இவ்­வாண்­டின் முதல் ஒன்பது மாதங்களில் உற்­பத்­தித் துறை 8.2% மேம்பாடு கண்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!