எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த புதிய திட்டங்கள்

திரவ இயற்கை எரிவாயு விநி யோகத்தில் நீக்குப்போக்கையும் பரவலான முறையையும் மேம் படுத்த சிங்கப்பூர் புதிய கொள் கைகளை வகுத்துள்ளது என்று வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் தெரி வித்துள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, ரஷ்யா, கத்தார், புருணை ஆகிய நாடுகளிலிருந்து சிங் கப்பூர் திரவ இயற்கை எரி வாயுவை இறக்குமதி செய்ய உள்ளது. இது சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயு கிடைப்பதை வலுப்படுத்தும் என்று எரிவாயு ஆசிய மாநாட்டில் நேற்று பேசியபோது அவர் அறிவித்தார். இயற்கை எரிவாயுவைப் பெறுவதில் நீக்குப்போக்குத் தன் மையும் பல நாடுகளில் இருந்து பெறும் பரவலான முறையுமே சிங்கப்பூரின் குறிக்கோள்கள் என்று திரு ஈஸ்வரன் கூறினார்.

‘ஷெல்’, ‘பெவிலியன் கேஸ்’ ஆகிய நிறுவனங்கள் அடுத்த பருவ எரிவாயு இறக்கு மதியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று அமைச்சர் இந்த வாரத் தொடக்கத்தில் அறிவித்து இருந்தார். எரிவாயு கொள்முதல் செய் வோருக்கு நீக்குப்போக்கான முறைகளில் குறைந்த கால குத்தகை, மாற்றுவிலை போன்ற வற்றை வழங்கியதால் இவற் றுக்குக் குத்தகை அளிக்கப்பட்ட தாக அவர் சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

தேசிய மரபுடைமைக் கழகத்தின் நல்லிணக்க நடைப் பயணங்கள் தொடரில் நேற்று ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு வந்த வருகையாளர்களுக்கு அக்கோயிலின் அறங்காவலர் ப. சிவராமன் கோயிலின் வரலாறு பற்றியும் அங்குள்ள வழிபாட்டு நடைமுறைகளையும் விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

ஏழு வழிபாட்டு இடங்களுக்கு நல்லிணக்க நடைப் பயணங்கள்

மெக்னல்லி லசால் வளாகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், லசால் கலைக் கல்லூரியின் பீட்டர் சியா, ஸ்டீவ் டிக்சன், நீ ஆன் கொங்ஸியின் உதவி தலைவர் ரிச்சர்ட் லீ, நீ ஆன் கொங்ஸியின் தலைவர் ஜெமி டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Nov 2019

லசால் 12 மாடி கட்டடத்துக்கு $50 மி. நன்கொடை