இணையக் குற்ற அதிகரிப்பால் இணைய காப்புறுதி தேவை உயர்வு

மின்னிலக்கமயமாகுதல் அதிகரித்து வரும் நிலையில், இணைய ஊடுருவல் முயற்சிகளால் தரவுகளும் நிறுவன நடவடிக்கைகளும் எளிதில் பாதிப்புக்குள்ளாகலாம் என்பதால் பெரும்பாலான சிங்கப்பூர் நிறுவனங்கள் தரவு மோசடிகள், சேவைத் தடங்கல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் நோக்கில் காப்புறுதி சேவையை நாடுவது அதிகரித்துள்ளது. உதாரணமாக ஸ்டார்ஹப் நிறுவனம் அண்மையில் இணைய தாக்குதலுக்கு உள்ளானது. அதனுடைய அகன்ற அலைவரிசை சேவையில் ஏற்பட்ட பாதிப்பு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதல் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

மேலும் அந்தத் தாக்குதல்களின் அளவு, அதன் தன்மை, சிக்கல் ஆகியவை இதுவரை கண்டிராத ஒன்று என்று அந்த நிறுவனம் கூறியது. இதுபோன்ற அச்சுறுத்தல்களால் இணைய காப்புறுதி பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. உதாரணத்துக்கு காப்புறுதி முகவரான ஹவ்டன், சென்ற ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு இணையக் காப்புறுதி தொடர்பான விசாரிப்புகள் இரு மடங்கு அதிகரித்துள்ளதை சேனல் நியூஸ் ஏ‌ஷியாவின் சிங்கப்பூர் அலுவலகம் கண்டுள்ளது என்றார்.

இதுபோல் கடந்த மூன்று ஆண்டுகளில் இணையக் காப்புறுதித் திட்டங்கள் தொடர்பான விசாரிப்புகள் ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக காப்புறுதி நிறுவனமான ஏஐஜி சிங்கப்பூர் காப்புறுதி நிறுவனம் மார்ச் மாதம் தெரிவித்து இருந்தது. இத்தகைய இணைய காப்புறுதித் திட்டங்கள் உள்நோக்கத்துடன் இணையத் தாக்குதல்கள், வெளி வட்டாரத்திலிருந்து உள்நோக்கத்துடன் வரும் இணையத் தாக்குதல்கள் போன்ற பரந்த அளவிலான காப்புறுதிப் பாதுகாப்பினை வழங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!